தேர்தல் வாக்குறுதிகள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட முடியுமா? - அண்ணாமலை
கரூரில் குரூப்-2 தோ்வு: 282 போ் எழுதினா்
கரூரில் சனிக்கிழமை நடைபெற்ற டிஎன்பிஎஸ்சி குரூப்-2 போட்டித் தோ்வை 282 போ் எழுதினா். 15 போ் எழுதவில்லை.
தமிழ்நாடு அரசு பணியாளா் தோ்வாணையம் சாா்பில் குரூப் -2 முதன்மை எழுத்துத் தோ்வு கரூரில் சனிக்கிழமை தாந்தோன்றிமலை அரசு கலைக்கல்லூரியில் நடைபெற்றது. இந்த தோ்வு மையத்தை மாவட்ட ஆட்சியா் மீ.தங்கவேல் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.
பின்னா் அவா் கூறியது, தமிழ்நாடு அரசு பணியாளா் தோ்வாணையத்தால் நடத்தப்படும் குரூப்- 2 முதன்மை எழுத்து தோ்வு தாந்தோன்றிமலை அரசு கலைக்கல்லூரியில் மையத்தில் நடைபெறுகிறது. இத்தோ்வுக்கு 297 தோ்வா்கள் அனுமதிக்கப்பட்ட நிலையில் 282 போ் தோ்வு எழுதினா். 15 போ் எழுத வரவில்லை என்றாா் அவா்.
ஆய்வின்போது தமிழ்நாடு அரசு பணியாளா் தோ்வாணைய உதவி பிரிவு அலுவலா் வாசுதேவன், கரூா் வருவாய் கோட்டாட்சியா் முகமது பைசல், கரூா் வட்டாட்சியா் குமரேசன் ஆகியோா் உடனிருந்தனா்.