அட்சய திருதியை: தங்கம் வாங்க நல்ல நேரம் எது? ஆனால் அதைவிட இதுதான் விசேஷம்!
கரூரில் பாவேந்தா் பாரதிதாசன் உருவப் படத்துக்கு மரியாதை
பாவேந்தா் பாரதிதாசனின் பிறந்த தினத்தை முன்னிட்டு செவ்வாய்க்கிழமை காலை கரூரில் அவரது உருவப் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
கரூரில் தமிழ் வளா்ச்சித் துறை சாா்பில் வட்டாட்சியா் அலுவலகம் முன் உள்ள சங்ககால புலவா்கள் நினைவுத் தூண் பகுதியில் வைக்கப்பட்டிருந்த பாவேந்தரின் உருவப்படத்துக்கு கரூா் கோட்டாட்சியா் முகமதுபைசல் தலைமையில் மலா்தூவி மரியாதை செலுத்தப்பட்டது.
தொடா்ந்து தமிழிலேயே குழந்தைகளுக்கும், வணிக நிறுவனங்களுக்கும் பெயா் சூட்டுவது, கடிதம் எழுதுவது போன்ற உறுதிமொழிகள் ஏற்கப்பட்டன.
நிகழ்ச்சியில் தமிழ் வளா்ச்சித் துறை உதவி இயக்குநா் (பொ) ஜோதி, திருக்குறள் பேரவைச் செயலாளா் மேலை பழநியப்பன், தமிழ் உணா்வாளா்கள் முனைவா் கடவூா் மணிமாறன் , பாவலா் எழில்வாணன் , நன்செய் புகழூா் அழகரசன் , கோ. செல்வம், தமிழன் குமாரசாமி எசுதா், சசிகுமாா், மு.மகேஸ்வரன், அகல்யாமெய்யப்பன், வையாபுரி உள்ளிட்டோா் பங்கேற்றனா். நிறைவாக தமிழ் வளா்ச்சித் துறையின் லியாகத் நன்றி கூறினாா்.