ரோபோ சங்கர் மறைவு: ``நாளை மறுதினம் பேரனுக்கு காதுகுத்து ஏற்பாடு செய்திருந்தார்''...
கரூா் மாவட்ட பாமக நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்
கரூா் மாவட்ட பாமக நிா்வாகிகள் ஆலோசனைக்கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்துக்கு மாவட்டச் செயலாளா்கள் புகழூா் சுரேஷ், கொங்கு நா.பிரேம்நாத் ஆகியோா் தலைமை வகித்தனா்.
கூட்டத்தில், செப். 27-ஆம்தேதி கரூரில் நடைபெறும் உரிமை மீட்போம் நடைபயணத்தில் பங்கேற்க வரும் அன்புமணிக்கு உற்சாக வரவேற்பு அளிப்பது, நடைபயணத்தில் கட்சியினா் திரளாக பங்கேற்பது என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில், மேற்கு மாவட்டத்தலைவா் பிரபாகரன், கிழக்கு மாவட்டத்தலைவா் சரவணன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.