திருச்சியில் மின்சாரம் பாய்ந்து இரு மின் ஊழியா்கள் உயிரிழப்பு
கர்நாடகம்: வாகனங்கள் நேருக்குநேர் மோதியதில் நால்வர் பலி!
கர்நாடகத்தில் வாகனங்கள் நேருக்குநேர் மோதிய விபத்தில் நால்வர் பலியாகினர்.
கர்நாடகத்தில் குடிபள்ளி கிராமத்தில் இரண்டு மோட்டார் பைக்குகள் மீது வெற்று தக்காளிப் பெட்டிகளை ஏற்றிச் சென்ற மினிலாரி நேருக்குநேர் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் இரண்டு பைக்குகளிலும் சென்ற 4 பேரும் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.
மேலும், சாலையோரத்தில் சென்று கொண்டிருந்த பாதசாரி ஒருவரும் பலத்த காயமடைந்தார். அவரும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு, ஆபத்தான நிலையில் உள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், விசாரணை நடப்பதாகக் கூறினர்.