ரஷியாவில் ஜெய்சங்கர்! இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவது குறித்து பேச்சுவார்த்தை
கர்நாடகாவில் தங்கம் மற்றும் செம்பு ஆய்வு உரிமத்தை வென்ற சிங்கரேணி!
ஹைதராபாத்: மத்திய சுரங்க அமைச்சகத்தால் நடத்தப்பட்டும் ஏலத்தின் மூலம் கர்நாடகாவில் தங்கம் மற்றும் செம்புக்கான ஆய்வு உரிமத்தைப் வென்றுள்ளதாக அரசுக்குச் சொந்தமான நிலக்கரிச் சுரங்க நிறுவனமான சிங்கரேணி நிலக்கரி நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஆன்லைன் ஏலத்தில் 37.75 சதவிகித ராயல்டியை மேற்கோள் காட்டி சிங்கரேணி L-1 ஏலதாரராக உருவெடுத்ததாக நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் பால்ராம் தெரிவித்தார்.
தங்கம் மற்றும் செம்பு வைப்புக்கள் அமைந்துள்ள கர்நாடகாவின் தேவதுர்கா பகுதியில் சிங்கரேணி ஆய்வுப் பிரிவு விரைவில் ஆராய்ச்சியைத் தொடங்கும் என்றார்.
சுரங்க உரிமைகளைப் பெறும் நிறுவனம் - அது சிங்கரேணி அல்லது வேறு நிறுவனமாக இருந்தாலும், கர்நாடக அரசுக்கு ராயல்டி செலுத்த வேண்டும்.
ஆய்வுப் பணிக்கு சுமார் ரூ.90 கோடி செலவாகும் என்று எதிர்பார்க்கப்படுகிற நிலையில், ரூ.20 கோடி மத்திய அரசால் மானியமாக வழங்கப்படும்.
இதையும் படிக்க: முதல் நாளில் சந்தாவை முழுவதுமாக பெற்ற ஜெம் அரோமாடிக்ஸ்!