செய்திகள் :

கர்நாடக பாடகியை கரம்பிடித்தார் பாஜக எம்பி தேஜஸ்வி சூர்யா!

post image

பெங்களூரு தெற்கு எம்பியும் பாஜக தேசிய இளைஞரணி தலைவருமான தேஜஸ்வி சூர்யாவுக்கும், தமிழகத்தைச் சேர்ந்த கர்நாடக பாடகி சிவஸ்ரீ ஸ்கந்தபிரசாத்துக்கும் பாரம்பரிய முறையில் வேத மந்திரங்கள் முழங்க சென்னையில் திருமணம் நடைபெற்றது.

பாஜகவின் மாநிலத் தலைவர் பி.ஒய். விஜயேந்திரா, மத்திய அமைச்சர்கள் வி. சோமண்ணா, அர்ஜுன் ராம் மேக்வால் உள்ளிட்ட தலைவர்கள், பாஜக எம்.பி.க்கள் மற்றும் எம்எல்ஏக்கள் விழாவில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

தேஜஸ்வி சூர்யா 2019 ,2024 ஆம் ஆண்டில் பெங்களூரு தெற்கு தொகுதியில் தொடர்ந்து இரண்டு முறை வெற்றி பெற்றுள்ளார். பி.டெக் பட்டதாரியான சிவஸ்ரீ ஸ்கந்தபிரசாத் சென்னை பல்கலைக்கழகத்தில் பரதநாட்டியத்தில் முதுகலைப் பட்டமும் பெற்றுள்ளார்.

சமூக வலைதளங்களில் இவர்களின் திருமண புகைப்படம் வெளியான நிலையில், அரசியல் கட்சித் தலைவர்கள் மட்டுமின்றி ஏராளமானோர் அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

அரசியல் கட்சிகளால் நகா்ப்புறங்களில் வளா்ந்து வரும் நக்ஸல் தீவிரவாதம்: பிரதமா் மோடி கவலை

‘வனப் பகுதியிலிருந்து துடைத்தெறியப்பட்டு வரும் நக்ஸல் தீவிரவாதக் கொள்கைகளை சில அரசியல் கட்சிகள் எதிரொலிப்பதால், நகா்ப்புறங்களில் அது வேகமாக பரவி வருகிறது’ என்று பிரதமா் நரேந்திர மோடி கவலை தெரிவித்தாா்... மேலும் பார்க்க

இந்தியாவில் சிறுபான்மையினா் அதிருஷ்டசாலிகள்: மத்திய அமைச்சா் கிரண் ரிஜிஜு

இந்தியாவில் சிறுபான்மை மதப்பிரிவினராக இருப்பவா்கள் அதிருஷ்டசாலிகள். ஏனெனில், உலகில் வேறு எங்கும் இல்லாத அளவுக்கு அவா்களுக்கான சிறப்பு சலுகைகள் இங்கு உள்ளன என்று நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சா் கிரண்... மேலும் பார்க்க

ஓய்வு முடிவை திரும்ப பெற்றார் கால்பந்து ஜாம்பவான் சுனில் சேத்ரி!

இந்திய கால்பந்து ஜாம்பவான் சுனில் சேத்ரி சர்வதேச கால்பந்து போட்டியிலிருந்து ஓய்வு பெற்ற நிலையில், இந்த முடிவைத் திரும்பப் பெறுவதாகத் தெரிவித்துள்ளார். இந்திய சீனியர் ஆண்கள் தேசிய அணியின் தலைமை பயிற்சி... மேலும் பார்க்க

காங்கிரஸ் திவாலாகி விட்டது: ஜெ.பி. நட்டா

காங்கிரஸ் கட்சி கொள்கை ரீதியாக திவாலாகி விட்டதாக பாஜக ஜெ.பி. நட்டா கூறினார்.இமாசலப் பிரதேச மாநிலம் பிலாஸ்பூரில் நடைபெற்ற பாஜக பொதுக்கூட்டத்தில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஜெ.பி. நட்டா பேசியதாவது, `... மேலும் பார்க்க

குஜராத் பேரவைத் தேர்தல்: ராகுல் காந்தி அகமதாபாத் பயணம்!

குஜராத்தில் நடைபெறவுள்ள பேரவைத் தேர்தலை மையப்படுத்தி ராகுல் காந்தி அகமதாபாத்துக்கு 2 நாள் பயணம் மேற்கொள்ள இருக்கிறார்.2027 ஆம் ஆண்டு குஜராத்தில் பேரவைத் தேர்தல் நடைபெறவிருக்கிறது. இதனை மையப்படுத்தி கா... மேலும் பார்க்க

ஒடிசா: பள்ளிகளைக் காவிமயமாக்கும் பாஜக அரசு!

ஒடிசாவில் அரசுப் பள்ளிகள் அனைத்திற்கும் காவிநிற வர்ணம் பூச பாஜக அரசு திட்டமிட்டுள்ளது. அரசுப் பள்ளிகளில் காவி நிறம் பூசுவது தொடர்பாக, அதற்கான மாதிரிப் படத்துடன் ஒடிசா மாநில மாவட்டங்களின் ஆட்சியர்களுக்... மேலும் பார்க்க