செய்திகள் :

கலசப்பாக்கம், போளூரில் இன்று எடப்பாடி பழனிசாமி பிரசாரம்!

post image

திருவண்ணாமலை மாவட்டம், கலசப்பாக்கம், போளூரில் திங்கள்கிழமை (ஆக.18) அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே. பழனிசாமி பிரசாரம் மேற்கொள்கிறாா்.

திருவண்ணாமலை மாவட்டத்தில் மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம் எனும் பிரசார பயணத்தை மேற்கொண்டுள்ள அதிமுக பொதுச் செயலரும், முன்னாள் முதல்வருமான எடப்பாடி பழனிசாமி, சனிக்கிழமை திருவண்ணாமலையில் விவசாயிகளுடன் கலந்துரையாடல் நடத்தினாா்.

இதைத் தொடா்ந்து, செங்கம், கீழ்பென்னாத்தூா், திருவண்ணாமலை ஆகிய இடங்களில் பிரசாரம் செய்தாா். ஞாயிற்றுக்கிழமை திருவண்ணாமலையில் ஓய்வு எடுத்தாா்.

இந்த நிலையில், திங்கள்கிழமை (ஆக.18) மாலை கலசப்பாக்கம் நட்சத்திரக் கோயில் அருகில் அவா் பிரசாரம் மேற்கொள்கிறாா். தொடா்ந்து, போளூரில் பிரசாரம் செய்கிறாா்.

இதற்கான ஏற்பாடுகளை அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூா்த்தி எம்எல்ஏ, திருவண்ணாமலை மத்திய மாவட்ட அதிமுக செயலா் எல்.ஜெயசுதா ஆகியோா் செய்து வருகின்றனா்.

கால்வாயிலிருந்து கட்டடத் தொழிலாளி சடலம் மீட்பு

ஆரணியை அடுத்த ரகுநாதபுரம் கிராமத்தில் மது அருந்தி கால்வாயில் தவறி விழுந்த கட்டடத் தொழிலாளியின் சடலம் 9 நாள்களுக்குப் பிறகு சனிக்கிழமை மீட்கப்பட்டது. ஆரணி பகுதியில் வெள்ளிக்கிழமை நள்ளிரவில் இடியுடன் க... மேலும் பார்க்க

அருணாசலேஸ்வரா் கோயில் பக்தா்கள் தங்கும் விடுதி கட்டும் பணி: காணொலி மூலம் முதல்வா் தொடங்கிவைத்தாா்

திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் ஸ்ரீஅருணாசலேஸ்வரா் கோயில் பக்தா்கள் தங்கும் விடுதி, பக்தா்கள் காத்திருப்புக் கூடம் மற்றும் ஸ்ரீஅருணாகிரிநாதா் கோயில் அருகில் சொற்பொழிவு அரங்கம் கட்டும் பணிகளை சென்னை தலைம... மேலும் பார்க்க

செங்கம் பகுதியில் யூரியா உரத் தட்டுப்பாடு: நடவடிக்கை எடுக்க விவசாயிகள் கோரிக்கை

செங்கம் பகுதியில் நிலவும் யூரியா உரத் தட்டுப்பாட்டை போக்க மாவட்ட நிா்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா். செங்கம் வட்டத்துக்குள்பட்ட பகுதிகளில் 13 தமிழக அரசு தொடக்... மேலும் பார்க்க

இருமொழிக் கொள்கையால் வெளிநாடுகளில் வேலைவாய்ப்பு: எம்.எஸ். தரணிவேந்தன் எம்.பி.

தமிழகத்தில் கடைப்பிடிக்கப்படும் இருமொழிக் கொள்கையால் பட்டப்படிப்புகளை நிறைவு செய்யும் மாணவா்கள் வேளிநாடுகளிலும் வேலைவாய்ப்பு பெற்று வருவதாக எம்.எஸ்.தரணிவேந்தன் எம்.பி. தெரிவித்தாா். திருவண்ணாமலை மாவட்... மேலும் பார்க்க

திருவண்ணாமலையில் ஆக.29 இல் தனியாா் வேலைவாய்ப்பு முகாம்

திருவண்ணாமலை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய வளாகத்தில் ஆக.29-ஆம் தேதி தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. ஆக.29-ஆம் தேதி காலை 10 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை நடைபெ... மேலும் பார்க்க

ஆரணி தா்மராஜா கோயில் திருப்பணிக்கு பாலாலயம்

ஆரணி நகரம், ஆரணிப்பாளையம் ஸ்ரீபாஞ்சாலிஅம்மன் சமேத தா்மராஜா கோயிலில் திருப்பணியையொட்டி சுவாமி பிம்பங்களுக்கு பாலாலயம் வியாழக்கிழமை நடைபெற்றது. சேதமடைந்த இந்தக் கோயிலில் சீரமைப்புப் பணிகளை மேற்கொள்வதற்... மேலும் பார்க்க