செய்திகள் :

கலப்பின கஞ்சா பறிமுதல்; கேரளாவில் `தல்லுமாலா' திரைப்பட இயக்குநர் உள்பட மூவர் கைது!

post image

'அனுரக கரிக்கின்வெல்லம்', 'உண்டா' மற்றும் 'தல்லுமாலா' போன்ற பல வெற்றிப் படங்களை இயக்கியவர் காலித் ரஹ்மான். அவரது சமீபத்திய படமான 'ஆலப்புழா ஜிம்கானா' தற்போது திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.

இந்த நிலையில், இன்று அதிகாலை 2 மணியளவில் கொச்சியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் கலால் துறையினர் சோதனை நடத்தினர்.

காலித் ரஹ்மான்
காலித் ரஹ்மான்

அதில், ஒளிப்பதிவாளர் சமீர் தாஹிர் வாடகைக்கு எடுத்திருந்த ஒரு குடியிருப்பில், இயக்குநர் காலித் ரஹ்மான், 'தமாஷா', 'பீமண்டே வாழி' படங்களுக்கு பெயர் பெற்ற மற்றொரு திரைப்பட இயக்குனர் அஷ்ரஃப் ஹம்சா, இயக்குனர்களின் நண்பர் ஷாலிஃப் முஹம்மது ஆகியோர் கஞ்சாவை பயன்படுத்த தயாரான நிலையில் கைது செய்யப்பட்டனர்.

இது தொடர்பாக பேசிய கலால் துறை அதிகாரி, ``ஒரு திரைப்படம் தொடர்பான விவாதங்களுக்காக கொச்சியில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் இருந்த மூவரை கைது செய்து, கலப்பின கஞ்சாவை பறிமுதல் செய்தோம்.

அவர்கள் மீது, போதை மருந்துகள் மற்றும் மனநோய்க்கு ஆளான பொருட்கள் (NDPS) சட்டம், 1985-ன் பிரிவுகள் 20(b) (II) A மற்றும் 29-ன் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

காலித் ரஹ்மான் - அஷ்ரஃப் ஹம்சா

கைது செய்யப்பட்ட மூவரும் தொடர்ந்து போதைப்பொருள் பயன்படுத்துபவர்கள். அவர்களிடமிருந்து 1.5 கிராம் கஞ்சா மட்டுமே பறிமுதல் செய்யப்பட்டதால், மூவரும் காவல்நிலைய ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.

மேலும் கலப்பின கஞ்சா எங்கிருந்து வந்தது என்பதைக் கண்டறிய விரிவான விசாரணை நடத்தப்படும்" எனத் தெரிவித்திருக்கிறார்.

மலையாளத் திரைப்படத் துறையில் போதைப்பொருள் விவகாரம் மீண்டும் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. சமீபத்தில், மலையாளத் திரைப்பட நடிகர் ஷைன் டாம் சாக்கோ போதைப்பொருள் வழக்கில் கைது செய்யப்பட்டார்.

பின்னர் விசாரணை மற்றும் மருத்துவ பரிசோதனைக்குப் பிறகு அவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தகக்கது.

Vikatan WhatsApp Channel

இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்... CLICK BELOW LINK

https://bit.ly/VikatanWAChannel

Thudarum Review: 'குடும்பத்திற்காக மீண்டும் ரகட் பாயாகும் மோகன்லால்' - 'துடரும்' எப்படி இருக்கு?

மெட்ராஸில் சினிமா ஃபைட்டராக இருந்த சண்முகம் (எ) பென்ஸ் (மோகன் லால்), ஒரு விபத்துக்குப் பிறகு சினிமாவை விட்டு விலகி, கேரளத்தில் கேப் டிரைவராக வாழ்கிறார். சண்முகத்திற்குத் தன்னுடைய அம்பாசிடர் கார் மீது ... மேலும் பார்க்க

Hanumankind: கேரளாவிலிருந்து உலக அரங்கை ஆளும் ராப் நட்சத்திரம்!

இசைக்கான களம் இப்போது பரந்து விரிந்திருக்கின்றது. கேசட், சி.டி-களில் பாடல்கள் கேட்கும் வழக்கம் முற்றிலுமாக அழிந்து, யூட்யூப், ஸ்பாடிஃபை என்ற செயலிகளுக்கு நாம் மாறியிருக்கிறோம். இப்படியான தொழில்நுட்பங்... மேலும் பார்க்க

``சில தருணங்களை வார்த்தைகளால் விவரிக்க முடியாது'' - மெஸ்ஸி அனுப்பிய கிப்ஃட்; நெகிழ்ந்த மோகன்லால்

மலையாள சினிமாவில் முன்னணி ஹீரோவாக வலம் வருபவர் நடிகர் மோகன்லால். அவரது நடிப்பில் சமீபத்தில் L2: எம்புரான் படம் வெளியானது. பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி இருந்தாலும் 325 கோடி வசூல் செய்த மலையாள சினிமாவின்... மேலும் பார்க்க

Nazriya: "மன்னித்துவிடுங்கள்... நலமடைந்து வருகிறேன்!" - நஸ்ரியா திடீர் அறிக்கை!

நீண்டநாள்கள் பொதுவெளியில் தோன்றாதது குறித்து விளக்கம் அளிக்கும் வகையில், அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார் நடிகை நஸ்ரியா நசிம் ஃபகத். அந்த அறிக்கையில் நண்பர்கள் மற்றும் உடன் பணிபுரிவோரால் தொடர்புகொள்ள மு... மேலும் பார்க்க

Bazooka:``அதோடு நானும், நீங்களும், நாமும்...''- மம்மூட்டி நம்பிக்கை

மம்மூட்டி நடித்திருக்கும் `பசூகா' திரைப்படம் நாளைய தினம் வெளியாகிறது. மம்மூட்டியின் இந்தத் திரைப்படத்தையும் அறிமுக இயக்குநர் டீனோ டெனிஸ் இயக்கியிருக்கிறார். மலையாள சினிமாவுக்கு பல இயக்குநர்களை மம்மூட்... மேலும் பார்க்க

Marana Mass: செளதி அரேபியா, குவைத்தில் தடை செய்யப்பட்ட பேசில் ஜோசப் படம் - இதுதான் காரணமா?

`பொன்மேன்' திரைப்படத்திற்குப் பிறகு பேசில் ஜோசப் நடிப்பில் வெளியாக இருக்கிற திரைப்படம் `மரண மாஸ்'. டார்க் காமெடி திரைப்படமாக உருவாகியுள்ள இப்படத்தை நடிகர் டொவினோ தாமஸ் தயாரித்திருக்கிறார். படத்தை அறிம... மேலும் பார்க்க