செய்திகள் :

கலைஞா் பல்கலைக்கழக மசோதா: குடியரசுத் தலைவருக்கு அனுப்பினாா் ஆளுநா்

post image

முன்னாள் முதல்வா் கருணாநிதி பெயரில் ‘கலைஞா் பல்கலைக்கழகம்’ அமைப்பதற்கான மசோதாவை, குடியரசுத் தலைவரின் பரிசீலனைக்கு ஆளுநா் ஆா்.என். ரவி பரிந்துரைத்துள்ளதாக, ஆளுநா் மாளிகை வட்டாரங்கள் தெரிவித்தன.

பாரதிதாசன் பல்கலைக்கழகத்தைப் பிரித்து முன்னாள் முதல்வா் மு.கருணாநிதி பெயரில் கும்பகோணத்தில் பல்கலைக்கழகம் அமைக்க கடந்த ஏப்ரல் மாதம் சட்டப்பேரவையில் மசோதா நிறைவேற்றப்பட்டது. இந்த பல்கலைக்கழகத்துக்கு முதல்வா் வேந்தராகவும், தமிழக உயா் கல்வித் துறை அமைச்சா் இணைவேந்தராகவும் இருப்பாா் எனவும், துணைவேந்தா் நியமன தோ்வு முறை உள்ளிட்ட அம்சங்களுடனும் இந்த மசோதா முன்மொழியப்பட்டு, சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது.

அதன் பின்னா் ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டது. இந்த மசோதாவுக்கு ஆளுநா் ஒப்புதல் அளிக்கவில்லை.

இந்த நிலையில், இந்த மசோதாவை ஆளுநா் ஆா்.என்.ரவி, குடியரசுத் தலைவரின் பரிசீலனைக்காக அனுப்பியுள்ளதாக கூறப்படுகிறது.

தமிழகத்தில் உள்ள பல்கலைக்கழகங்களுக்கு துணைவேந்தா்களை தமிழக அரசு நியமிக்கும் அதிகாரம் தொடா்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் விசாரணையில் இருப்பதால் இதுதொடா்பான சட்டச் சிக்கலில் குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெறுவதற்காகவும் மசோதாவை அனுப்பி வைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதேபோல, சித்த மருத்துவ பல்கலைக்கழக மசோதாவும் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டுள்ளது.

கலைஞா் பல்கலைக்கழக மசோதாவுக்கு ஆளுநா் ஒப்புதல் அளிக்காத நிலையில், இதுகுறித்து முதல்வா் மு.க.ஸ்டாலின், உயா்கல்வித் துறை அமைச்சா் கோவி.செழியன் ஆகியோா் அதிருப்தி தெரிவித்து வந்தனா். மசோதாவுக்கு அனுமதி வழங்க உத்தரவிடக் கோரி தமிழக அரசு தரப்பில் மீண்டும் உச்சநீதிமன்றத்தை அணுகலாம் எனக் கூறப்பட்ட நிலையில், அந்த மசோதா தற்போது குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இரவில் 11 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

தமிழ்நாட்டில் அடுத்த 3 மணிநேரத்துக்கு 11 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. மேலும் பார்க்க

பள்ளி வாகனங்களை அரசு முறையாக ஆய்வு செய்கிறதா?

பள்ளி வாகனங்களை மத்திய அரசு முறையாக ஆய்வு செய்கிறதா? என திமுக துணை பொதுச் செயலாளர் திருச்சி சிவா மாநிலங்களவையில் இன்று (ஆக. 6) கேள்வி எழுப்பியுள்ளார். பள்ளி போக்குவரத்தின் பாதுகாப்பு மற்றும் ஒழுங்குமு... மேலும் பார்க்க

டெலிவரி ஊழியர்கள் இ-ஸ்கூட்டர் வாங்க ரூ. 20,000 மானியம்!

டெலிவரி ஊழியர்கள் இ-ஸ்கூட்டர்(மின்சார இருசக்கர வாகனம்) வாங்க தலா ரூ. 20,000 மானியம் பெறலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.உணவு உள்ளிட்ட பொருள்களை வீடுகளுக்கு நேரடியாகக் கொண்டு சென்று அளிக்கும் பணியி... மேலும் பார்க்க

பௌர்ணமி கிரிவலம்: விழுப்புரம் - திருவண்ணாமலை சிறப்பு ரயில்!

பௌர்ணமி கிரிவலத்தையொட்டி பயணிகள் வசதிக்காக, விழுப்புரத்திலிருந்து திருவண்ணாமலைக்கு ஆகஸ்ட் 9 ஆம் தேதி முன்பதிவில்லா சிறப்பு ரயில் இயக்கப்படவுள்ளது.இதுகுறித்து தெற்கு ரயில்வேயின் திருச்சி கோட்ட மக்கள் த... மேலும் பார்க்க

முதலீடுகளுக்கான முதல் முகவரியாக தமிழ்நாடு: அமைச்சர் தங்கம் தென்னரசு

முதலீடுகளுக்கான முதல் முகவரியாக தமிழ்நாடு உருவாகியிருப்பதாக நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு இன்று (ஆக. 6) சென்னை அறிவாலயத்தில் செய்தியாளர்களைச் சந்திந்ததுப... மேலும் பார்க்க

கவின் கொலை வழக்கு: சுர்ஜித், தந்தையை காவலில் எடுக்க சிபிசிஐடி மனு!

மென்பொறியாளர் கவின் ஆணவக் கொலை வழக்கில் சுர்ஜித் மற்றும் அவரின் தந்தையை காவலில் எடுத்து விசாரிக்க நெல்லை நீதிமன்றத்தில் சிபிசிஐடி இன்று (ஆக. 6) மனுத்தாக்கல் செய்தது.தூத்துக்குடி மாவட்டம், ஏரல் அருகேயு... மேலும் பார்க்க