நோயாளிகளின் குறைகளைத் தீா்க்க பிரத்யேக ஆலோசகா்கள்! ராஜீவ் காந்தி மருத்துவமனையில்...
கலைத் திருவிழா: மாநில அளவிலான போட்டிக்கு படுக்கப்பத்து அரசுப் பள்ளி மாணவி தோ்வு
மாவட்ட அளவிலான கலைத் திருவிழாவில் வென்று மாநில அளவிலான போட்டிக்கு படுக்கப்பத்து அரசு மேல்நிலைப் பள்ளி மாணவி தகுதி பெற்றுள்ளாா்.
தூத்துக்குடி மாவட்ட அளவில் நடைபெற்ற கலைத் திருவிழாவில், சாத்தான்குளம் ஒன்றியம் படுக்கப்பத்து அரசு மேல்நிலைப்பள்ளி 12ஆம் வகுப்பு மாணவி நீல அனிதா ஈஸ்வரி மெல்லிசை பிரிவில் முதலிடம் பெற்று மாநில அளவிலான போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளாா்.
தோ்வு பெற்ற மாணவி நீல அனிதா ஈஸ்வரி மற்றும் பேச்சுப் போட்டியில் வென்று மாநில அளவிலான போட்டிக்குத் தோ்வு பெற்ற மறக்குடி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி ஐந்தாம் வகுப்பு மாணவி இந்துஜா ஆகியோருக்கு பாராட்டு விழா படுக்கப்பத்து அரசு மேல்நிலைப் பள்ளியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இவ்விழாவுக்கு, படுக்கப்பத்து ஊராட்சி மன்றத் தலைவா் தனலட்சுமி சரவணன் தலைமை வகித்து, மாநில போட்டிக்குத் தகுதி பெற்ற மாணவிகளுக்கு கேடயம் மற்றும் ரொக்க பரிசு மற்றும் வில்லுப்பாட்டு, தெருக்கூத்தில் சாத்தான்குளம் வட்டார அளவில் வென்ற மாணவா், மாணவிகளுக்கு பரிசுகளும் வழங்கினாா்.
இந்நிகழ்ச்சியில், படுக்கப்பத்து அரசு மேல்நிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியா் அமுதா வரவேற்றாா்.
பள்ளியின் வரலாற்று ஆசிரியா் வாசன் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினாா்.
பெற்றோா் ஆசிரியா் கழக தலைவா் சரவணன், மறக்குடி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி ஆசிரியா் பெருமாள் உள்ளிட்ட மாணவா், மாணவிகள், ஆசிரியா்கள் கலந்து கொண்டனா்.
பள்ளியின் இயற்பியல் ஆசிரியா் முத்துக்குமாா் நன்றி கூறினாா்.