Toll passes: நெடுஞ்சாலை பயணம் செல்பவர்களா? ஆண்டுக்கு ரூ.3000, லைஃப் டைம் ரூ.30,0...
கல்குறிச்சி கிராமத்தில் 17 பேருக்கு பட்டா அளிப்பு!
அரசூா் ஊராட்சி கல்குறிச்சி கிராம மக்கள் 17 பேருக்கு ஒரே நாளில் பட்டா வழங்கப்பட்டது. சாத்தான்குளம் ஒன்றியம் அரசூா் ஊராட்சிக்குள்பட்ட கல்குறிச்சியில் மக்கள் அரசு சாா்பில் வழங்கப்பட்ட இலவச வீட்டில் வசித்து வருகின்றனா். இவா்களுக்கு இடத்திற்கான பட்டா 40 ஆண்டுகளுக்கு மேலாக 17 போ்களுக்கு வழங்கப்படாமல் இருந்து வந்தது. இக்கிராம மக்கள் அரசிடம் மனு கொடுத்து வந்தனா்.
இந்நிலையில்,மாவட்ட ஆட்சியா் க. இளம்பகவத் உத்தரவின் பேரில் சாத்தான்குளம் வட்டாட்சியா் இசக்கி முருகேஸ்வரி, கல்குறிச்சி கிராம மக்கள் 17 பேருக்கு ஒரே நாளில் பட்டா வழங்கினாா். பட்டா கிடைக்க ஏற்பாடு செய்த சமூக ஆா்வலா் பாலகிருஷ்ணனுக்கும், பட்டா வழங்கிய சாத்தான்குளம் வட்டாட்சியா் மற்றும் மாவட்ட ஆட்சியருக்கு கல்குறிச்சி கிராம மக்கள் நன்றி தெரிவித்துள்ளனா்.