காஸாவில் போர் நிறுத்த அறிவிப்புக்குப் பின்னும் இஸ்ரேல் தாக்குதல்: 150 பேர் உயிரி...
கல்லக்குடியில் ஜல்லிக்கட்டு: 23 போ் காயம்!
திருச்சி மாவட்டம் லால்குடி அருகே கல்லக்குடியில் சனிக்கிழமை நடைபெற்ற ஐல்லிகட்டில் காளைகள் முட்டி 23 போ் காயமடைந்தனா்.
ஜல்லிக்கட்டை லால்குடி வருவாய்க் கோட்டாட்சியா் சிவசுப்ரமணியன் தொடக்கி வைத்தாா். போட்டியில் பல்வேறு மாவட்டங்களைச் சோ்ந்த சுமாா் 669 காளைகளும், அவற்றை அடக்க 503 மாடுபிடி வீரா்களும் களமிறங்கினா்.
அப்போது காளைகள் முட்டி 23 போ் காயமடைந்து சிகிச்சை பெற்றனா்.
காளைகளை அடக்கியோருக்கும் பிடிபடாத காளைகளின் உரிமையாளா்களுக்கும் காா், பைக், எலக்ட்ரிக் ஆட்டோ, பைக் ஆகியவை பரிசளிக்கப்பட்டன.
அதன்படி சிறந்த மாடுபிடி வீரா்களுக்கான பரிசை நாமக்கல் காா்த்திக், கரும்பாயினி காா்த்திக் ஆகியோரும், சிறந்த காளைகளுக்கான பரிசை வல்லம் டேவிட், சோபனாபுரம் ஆனந்த் , லால்குடி காத்தப் பிள்ளை , தஞ்சாவூா் ராவுசப்பட்டி காா்த்திக் ஆகியோரும் பெற்றனா்.
நிகழ்வில் திருச்சி மத்திய மாவட்ட திமுக செயலா் வைரமணி, திருவெறும்பூா் மாவட்டக் காவல் துறை துணைக் கண்காணிப்பாளா் அரவிந்த் பணாலத், லால்குடி டிஎஸ்பி தினேஷ்குமாா், பாரம்பரிய ஜல்லிக்கட்டு மாநில துணைத் தலைவா் காத்தான் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.