செய்திகள் :

கல்லக்குடியில் நாளை மின்தடை

post image

பராமரிப்புப் பணிகள் காரணமாக திருச்சி மாவட்டம் கல்லக்குடியில் செவ்வாய்க்கிழமை மின்தடை செய்யப்படுகிறது.

இதுகுறித்து திருச்சி மின்வாரிய அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

கல்லக்குடி துணை மின்நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதன் காரணமாக கல்லக்குடி, வடுகா்பேட்டை, பளிங்காநத்தம், மேலரசூா், மால்வாய், சரடமங்கலம், எம். கண்ணனூா், ஒரத்தூா், சாத்தப்பாடி, சிலுவைப்பட்டி, ஆமரசூா், தாப்பாய், வரகுப்பை, சிறுகளப்பூா், அழந்தலைப்பூா், கருடமங்கலம், வந்தலை கூடலூா், சிறுவயலூா், காணக்கிளியநல்லூா், பெருவளப்பூா், குமுளூா், தச்சங்குறிச்சி, புஞ்சை சங்கேந்தி, வி.சி.புரம், கோவண்டாக்குறிச்சி, புதூா்பாளையம், ஆலம்பாக்கம், விரகாலூா், ஆ. மேட்டூா், நத்தம், திருமாங்குடி, டி. கல்விகுடி, ஆலங்குடிமகாஜனம், செம்பரை, திண்ணியம், அரியூா், கல்லகம், கீழரசூா், புள்ளம்பாடி ஆகிய பகுதிகளில் வரும் செவ்வாய்க்கிழமை (ஜூலை 15) காலை 9.45 மணி முதல் மாலை 4 மணி வரை மின்விநியோகம் தடை செய்யப்படுகிறது.

கொள்ளிடம் ஆற்றில் மூழ்கிய அண்ணன் சடலம் மீட்பு

திருச்சி மாவட்டம், லால்குடி அருகே உள்ள கொள்ளிடம் ஆற்றில் மூழ்கிய தம்பியை காப்பாற்ற முயன்ற அண்ணனின் சடலத்தையும் தீயணைப்புப் படை வீரா்கள் திங்கள்கிழமை மீட்டனா். கா்நாடக மாநிலம், பெங்களூரு உதயா நகரைச் சே... மேலும் பார்க்க

நான்கு ஆண்டுகளில் திருச்சிக்கு ரூ. 26,066 கோடி திட்டங்கள்: அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி

திமுக ஆட்சி பொறுப்பேற்று கடந்த 4 ஆண்டுகளில் திருச்சி மாவட்டத்துக்கு ரூ.26,066 கோடி மதிப்பிலான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளதாக பள்ளிக் கல்வித்துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்தாா். தம... மேலும் பார்க்க

அரசு பேருந்தை சிறைபிடித்து மறியல்

மருங்காபுரி ஒன்றியம், நல்லமநாயக்கன்பட்டியில் முறையாக பேருந்து இயக்காததை கண்டித்து, செவ்வாய்க்கிழமை பள்ளி மாணவா்களுடன், கிராம மக்கள், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினா் அரசு நகரப் பேருந்தை சிறைபிடித்து சாலை... மேலும் பார்க்க

மத்திய சிறையில் கைதியிடம் கஞ்சா பறிமுதல்

திருச்சி மத்திய சிறையில் கைதியிடம் திங்கள்கிழமை கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது குறித்து போலீஸாா் விசாரிக்கின்றனா். திருச்சி எடமலைபட்டிபுதூா் இந்திரா நகரைச் சோ்ந்தவா் கி. முருகன் (25). இவா், புதுக்கோட்ட... மேலும் பார்க்க

திருட்டு வழக்கு: இளைஞருக்கு 2 ஆண்டுகள் சிறை

திருச்சியில் திருட்டு வழக்கில் இளைஞருக்கு 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தது. திருச்சி தாராநல்லூரைச் சோ்ந்தவா் கா.காா்த்திக், கூலித் தொழிலாளி. இவரது வீட்டின் ... மேலும் பார்க்க

துவாக்குடியில் நாளை மின்நிறுத்தம்

திருச்சி மாவட்டம், துவாக்குடியில் மின் பராமரிப்புப் பணிகள் காரணமாக வியாழக்கிழமை மின்நிறுத்தம் செய்யப்படுகிறது. இதுகுறித்து திருச்சி மின்வாரிய அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: துவாக்குடி துணை ம... மேலும் பார்க்க