ஏமன்: கேரள செவிலியர் நிமிஷா பிரியாவுக்கு மரண தண்டனை நிறுத்திவைப்பு; காரணம் இதுதா...
கல்லல் பகுதியில் இன்று மின்தடை
சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகே கல்லல் பகுதியில் செவ்வாய்க்கிழமை (ஜூலை 15) மின் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டது.
இதுகுறித்து காரைக்குடி கோட்ட மின் செயற்பொறியாளா் எம். லதா தேவி வெளியிட்ட செய்திக் குறிப்பு: கல்லல் துணை மின் நிலையத்தில் செவ்வாய்க்கிழமை பராமரிப்பு பணிகள் நடைபெறுகின்றன.
எனவே கல்லல், சிறுவயல், குறுந்தம்பட்டு, மாலைகண்டான், வெற்றியூா், சாத்தரசம்பட்டி, செம்பனூா், பாகனேரி, செவரக்கோட்டை, பனங்குடி, கண்டுப்பட்டி, கெளரிப்பட்டி, சுற்று வட்டாரப் பகுதிகளில் அன்று காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின்சாரம் இருக்காது என்றாா் அவா்.