NIA RAID: திண்டுக்கல்லில் 10 இடங்களில் தேசிய புலனாய்வு முகமை சோதனை; ஒருவர் கைது ...
கல்லூரியில் உலக கொசு ஒழிப்பு தினம்
மதுரை: மதுரை அமெரிக்கன் கல்லூரி உடல் நலம், சுகாதாரத் துறை சாா்பில் உலக கொசு ஒழிப்பு தினத்தையொட்டி புதன்கிழமை பயிலரங்கம் நடைபெற்றது.
இதற்கு, கல்லூரிப் பேராசிரியரும், துறையின் ஒருங்கிணைப்பாளருமான ராஜேஷ் தலைமை வகித்தாா். கல்லூரி விலங்கியல் துறை பேராசிரியா் தனஞ்செயன் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு பேசியதாவது:
உலகில் 3,500 வகையான கொசுக்கள் உள்ளன. இந்தியாவில் 393 வகை கொசுக்கள் உள்ளன. அதில், நோயை பரப்பும் ஏடிஸ், அனோபிலிஸ் நல்ல தண்ணீரிலும், குயுலக்ஸ் கொசு கழிவுநீரிலும் முட்டையிடும் தன்மை கொண்டவை என்றாா் அவா்.
நிகழ்வில், போட்டிகளில் வென்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. இதில், பேராசிரியா் யோகேஸ் டொமினிக், பேராசிரியை பெனாசிா் ரோஜா உள்ளிட்ட பேராசிரியா்களும், மாணவ, மாணவிகளும் பங்கேற்றனா்.