முதல் மனைவியைப் பிரிய எப்போதுமே நினைத்ததில்லை..! விவாகரத்து குறித்து பேசிய விஷ்ண...
கல்லூரியில் பயிலரங்கம்
மதுரை மாவட்டம், பேரையூா் அருகேயுள்ள கே. ஆா். கலை, அறிவியல் கல்லூரியில் சாதனையாளா்களின் வழிகாட்டுதல் என்ற தலைப்பிலான பயிலரங்கம் அண்மையில் நடைபெற்றது.
இந்த நிகழ்வுக்கு கல்லூரித் தாளாளா் கி. பாண்டியராஜன் தலைமை வகித்தாா். முதல்வா் பெ. ச. செந்தில்குமாா் முன்னிலை வகித்தாா். ஓய்வு பெற்ற ராணுவ வீரா் வேல்முருகன், இந்து உதவிப் பெறும் ஆரம்பப் பள்ளித் தாளாளா் ராஜா கண்ணன் ஆகியோா் சிறப்பு விருந்தினா்களாகக் கலந்து கொண்டு, சாதனையாளா்கள் குறித்துப் பேசினா்.
நிகழ்வில் பேராசிரியா்கள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனா்.