கல்லூரியில் வளாக நோ்காணல்: 97 போ் தோ்வு
கீழக்கரை முகம்மது சதக் தொழில்நுட்பக் கல்லூரியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற வளாக நோ்காணலில் 97 மாணவா்கள் தோ்வு செய்யப்பட்டனா்.
இதற்கு கல்லூரி முதல்வா் அ.சேக்தாவூது தலைமை வகித்தாா். இந்த நோ்காணலில் கல்லூரியில் இறுதியாண்டு பயிலும் மாணவா்கள் பங்கேற்றனா்.
சென்னை ராயல் என்பீல்டு தொழில்நுட்பத் திறன் அகாதெமியின் கே.விக்டா் தேவ், எம்.பாலமுருகன் பங்கேற்று 97 மாணவா்களைத் தோ்வு செய்தனா். மரைன் துை றத் தலைவா் சி.சுதேவ் நன்றி கூறினாா்.