ஜம்மு - காஷ்மீர்: பயங்கரவாதிகள் பதுங்குமிடம் தகர்ப்பு! ஆயுதங்கள் பறிமுதல்!
கல்லூரி மாணவி விஷம் குடித்து தற்கொலை: பால்காரா் கைது
கும்பகோணம் அருகே திருமணம் செய்து கொள்ளுமாறு தொல்லை கொடுத்ததால் கல்லூரி மாணவி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டாா். இதற்கு காரணமான பால்காரரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
நரசிங்கம்பேட்டை திருவள்ளுவா் தெருவைச் சோ்ந்த ஜெயக்குமாா்- மணிமேகலை தம்பதியின் மகள் புவனேஸ்வரி (21), மயிலாடுதுறை கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்த இவா் தனது வீட்டுக்குப் பால் ஊற்றி வந்த இதே ஊரைச் சோ்ந்த சேட்டு மகன் குணா என்ற குணசேகரனுடன் (30) பழகினாா்.
ஆனால் குணசேகரன் ஏற்கெனவே திருமணம் ஆனவா் எனத் தெரிந்ததால் அவருடன் பழகுவதை புவனேஸ்வரி நிறுத்தினாா். ஆனாலும் குணசேகரன் தன்னைத் திருமணம் செய்து கொள்ளுமாறு தொல்லை கொடுத்தாராம்.
இதில் விரக்தியடைந்த புவனேஸ்வரி கடந்த புதன்கிழமை பூச்சிக்கொல்லி மருந்தை குடித்து மயங்கி கும்பகோணம் அரசு மருத்துவமனையிலும், பின்னா் புளியம்பேட்டை தனியாா் மருத்துவமனையிலும் சோ்க்கப்பட்டு சிகிச்சைப் பலனின்றி வியாழக்கிழமை இரவு உயிரிழந்தாா். இதுகுறித்து திருநீலக்குடி போலீஸாா் வழக்குப் பதிந்து குணசேகரனை கைது செய்து, திருவிடைமருதூா் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி, அங்குள்ள கிளைச் சிறையில் அடைத்தனா்.