செய்திகள் :

கல்லூரி விடுதியில் 15 வயது மாணவனைக் கொன்ற 3 சிறுவர்கள் கைது!

post image

ஒடிசாவில் 15 வயது மாணவனைக் கொன்ற 3 சிறுவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கியோஞார் மாவட்டத்தின் தங்கரபதா கிராமத்தைச் சேர்ந்தவர் ஜலந்தரா மாஹாந்தா (வயது 15). இவர் பத்தாம் வகுப்புப் பொது தேர்வில் தேர்ச்சிப் பெற்று கடந்த 15 நாள்களாக தனியார் கல்லூரி நடத்தி வந்த கோடைக்கால வகுப்பில் பயிற்சி பெற்று வந்தார்.

இந்நிலையில், கடந்த ஏப்.22 ஆம் தேதி அதிகாலை 2 மணியளவில் அந்தக் கல்லூரியின் விடுதியில் தங்கியிருந்த ஜலந்தராவின் அறைக்கு அருகிலுள்ள குடிநீர் குழாயில் தண்ணீர் பிடிக்க வந்த மற்றொரு மாணவர் ஜலந்தரா மயங்கிய நிலையில் கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார்.

பின்னர், உடனடியாக கல்லூரி அதிகாரிகளுக்கு அந்த மாணவர் தகவல் அளித்ததைத் தொடர்ந்து அவரை மாவட்ட மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் ஜலந்தரா ஏற்கனவே இறந்துவிட்டதாகக் கூறியுள்ளனர்.

இதனைத் தொடர்ந்து, காவல் துறையினர் மேற்கொண்ட விசாரணையில் உயிரிழந்த ஜலந்தராவுக்கும் அந்த கோடைக்கால வகுப்பின் மாணவர் தலைவரான மற்றொரு சிறுவனுக்கும் தொடர்ந்து மோதல் போக்கு நிலவியது கண்டறியப்பட்டது.

கடந்த ஏப்.21 ஆம் தேதி இரவு அந்த மாணவர் தலைவரும் ஜலந்தராவுடன் பகையை வளர்த்து வந்த மற்ற 2 மாணவர்களுடன் இணைந்து அவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். அப்போது, மோதல் தீவிரமடைந்ததால் ஜலந்தராவை போர்வையால் மூடி அவரது முகத்தில் துணியை வைத்து மூச்சடைத்து கொலை செய்துள்ளனர்.

இதனால், கைது செய்யப்பட்ட 3 சிறுவர்களும் குழந்தைகள் நல ஆணையத்தின் முன்பு ஆஜர் படுத்தப்பட்டு இன்று ஜார்சுகுடா மாவட்டத்திலுள்ள கூர்நோக்கு மையத்தில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இதையும் படிக்க:புதிய போப்-ஐ தேர்ந்தெடுக்கும் குழுவில் 4 இந்தியர்கள்!

பெஹல்காம் தீவிரவாதிகளைப் பற்றிய தகவல்களுக்கு வெகுமதி அறிவிப்பு!

ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தின் பெஹல்காமில் சுற்றுலாப் பயணிகள் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய தீவிரவாதிகளைப் பற்றி தகவல் அளிப்பவர்களுக்கு வெகுமதி அளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பெஹல்காமில் சுற்று... மேலும் பார்க்க

அமெரிக்க துணை அதிபரின் ஜெய்ப்பூர் மாளிகை வருகை ரத்து!

இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் மற்றும் அவரது குடும்பத்தினரின் ஜெய்ப்பூர் மாளிகை வருகையானது தற்போது ரத்து செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக... மேலும் பார்க்க

ஜம்மு - காஷ்மீர்: தீவிரவாதிகளுடன் பாதுகாப்புப் படையினர் துப்பாக்கிச் சூடு!

ஜம்மு - காஷ்மீரின் குல்காம் மாவட்டத்தில் தீவிரவாதிகளுடன் பாதுகாப்புப் படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தி வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. குல்காம் மாவட்டத்தின் தாங்மார்க் பகுதியில் தீவிரவாதிகளின் நடமாட... மேலும் பார்க்க

புதிய போப்-ஐ தேர்ந்தெடுக்கும் குழுவில் 4 இந்தியர்கள்!

கத்தோலிக்க திருச்சபையின் அடுத்த போப்-ஐ தேர்ந்தெடுக்கும் குழுவில் இந்தியாவைச் சேர்ந்த 4 கார்டினல்கள் உள்ளனர். நுரையீரல் பிரச்னையால் பாதிக்கப்பட்டிருந்த வாடிகன் நகரத்தின் தலைவரும் கத்தோலிக்க திருச்சபையி... மேலும் பார்க்க

போப் பிரான்சிஸ் மறைவுக்கு பிறகு ‘கான்க்ளேவ்’ படத்தின் பார்வையாளர்கள் அதிகரிப்பு!

போப் பிரான்சிஸ் மறைவால் ‘கான்க்ளேவ்’ திரைப்படத்தின் பார்வையாளர்கள் எண்ணிக்கை பன்மடங்காக உயர்ந்துள்ளது. வாடிகன் நகரத்தின் தலைவரும் கத்தோலிக்க திருச்சபையின் தலைமை மதகுருவுமான போப் பிரான்சிஸ், ஏப். 21 ஆம... மேலும் பார்க்க

துருக்கியில் 6.2 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்! அதிர்வில் சிக்கிய முக்கிய நகரம்?

துருக்கி நாட்டில் 6.2 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.இதனால் அந்நாட்டின் முக்கிய நகரத்தின் மக்கள் வெளியேற்றப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. துருக்கியின் முக்கிய பொருளாதார மற்றும் கலாச... மேலும் பார்க்க