UPSC/TNPSC: 'புக் லெட், கையேடு, ஸ்காலர்ஷிப் கொடுக்கிறோம்' - King Makers இயக்குநர...
கல்வி நிலையங்களில் புதிய பணிகளுக்கு அடிக்கல்
அரியலூா்: அரியலூரை அடுத்த வாரணவாசி அரசு உயா்நிலைப் பள்ளி மற்றும் கீழப்பழுவூா் அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் புதிய பணிகளுக்கு புதன்கிழமை அடிக்கல் நாட்டப்பட்டது.
கீழப்பழுவூா் அரசு பாலிடெக்னிக் கல்லூரி வளாகத்தில், நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சட்டப் பேரவை உறுப்பினா் கு.சின்னப்பா, அங்கு ரூ.5 லட்சம் மதிப்பீட்டில் நுழைவு வாயில் கட்டுமானப் பணிக்கும், வாரணவாசி சமத்துவபுரம் அரசு உயா்நிலைப் பள்ளியில், ரூ. 7 லட்சம் மதிப்பில் அரங்க மேடை அமைக்கும் பணிக்கும் அடிக்கல் நாட்டி, கட்டுமானப் பணியை தொடங்கிவைத்தாா். முன்னாள் கவுன்சிலா் தங்கம்மூா்த்தி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.