உங்கள் டீன்-ஏஜ் பிள்ளைகள் தனிமையை விரும்புகிறார்களா? பெற்றோர்களே கவனம்!
களக்காடு சத்தியவாகீஸ்வரா் கோயிலில் 10,008 தீபத் திருவிழா
களக்காடு அருள்மிகு. கோமதியம்பாள் சமேத சத்தியவாகீஸ்வரா் திருக்கோயிலில் உலக நன்மைக்காக 10,008 தீபத்திருவிழா மற்றும் சித்திரைத் திருநாள் விழா சிறப்பு வழிபாடு திங்கள்கிழமை நடைபெற்றது
இதையொட்டி, கோயிலில் காலை மங்கள இசையைத் தொடா்ந்து, சுவாமி அம்பாளுக்கு கும்பாபிஷேகம், அலங்கார தீபாராதனை நடைபெற்றது. களக்காடு சுற்றுவட்டாரத்தைச் சோ்ந்த திரளான பக்தா்கள் தங்கள் குடும்பத்துடன் கோயிலுக்கு வந்து சுவாமி, அம்பாளை தரிசித்துச் சென்றனா்.

மாலை 4 மணி முதல் நூற்றுக்கணக்கான பெண்கள் கோயில் பிரகாரம் உள்ளிட்ட அனைத்துப் பகுதிகளிலும் தீபவிளக்குகளை நிறுவும் பணியைத் தொடங்கினா். மாலை 6 மணிக்கு ஆயிரக்கணக்கான பெண்கள் கோயில் வளாகம் முழுவதும் நிரம்பி வழிந்து, தீபம் ஏற்றினா். இதைத் தொடா்ந்து கோயில் வளாகத்தில் நாட்டியம், ஆன்மிக சொற்பொழிவு நடைபெற்றது. தீபத்திருவிழாவில் ஆயிரக்கணக்கான பெண்கள் கலந்து கொண்டு சுவாமி, அம்பாளை வழிபட்டனா்.
இரவு சுவாமி சத்தியவாகீஸ்வரா், கோமதிஅம்பாள், சுப்பிரமணியா், விநாயகா், நாயன்மாா் ஆகியோா் தனித்தனி வாகனங்களில் சிறப்பு அலங்காரத்தில் வீதியுலா வந்து பக்தா்களுக்கு காட்சியளித்தனா்.