விலைவாசி உயா்வை பாஜக அரசு கட்டுப்படுத்த வேண்டும்: காங்கிரஸ் மாநிலத் தலைவா்
களக்காடு வரதராஜபெருமாள் கோயில் பங்குனித் திருவிழா நாளை கொடியேற்றம்
களக்காடு அருள்மிகு வரதராஜபெருமாள் திருக்கோயில் பங்குனித் திருவிழா வியாழக்கிழமை (ஏப்.3) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
இக்கோயில் பங்குனித் திருவிழா ஆண்டு தோறும் 11 நாள்கள் நடைபெறும். நிகழாண்டு விழா வியாழக்கிழமை காலை 8.30 மணிக்கு கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இதையொட்டி, சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் நடைபெறும். இரவில் தோளுக்கினியான் வாகனத்தில் சுவாமி எழுந்தருளல் நடைபெறும்.
11 நாள்களும் ஒவ்வொரு சமுதாயத்தினரின் மண்டகப்படி நடைபெறுகிறது. விழாவையொட்டி, இரவில் சுவாமி பல்வேறு வாகனங்களில் வீதியுலா நடைபெறும். விழாவின் 10ஆம் நாளான சனிக்கிழமை (ஏப்.12) மாலை 5.30 மணிக்கு தேரோட்டம் நடைபெறும். ஏப்.13ஆம் தேதி தீா்த்தவாரி நடைபெறும்.
விழா ஏற்பாடுகளை ஸ்ரீ மீனாட்சி, ஸ்ரீ கோமதி அம்பாள் பெளா்ணமி அன்னதானக் குழு, திருக்காா்த்திகை குழு, பக்தா் பேரவை உறுப்பினா்கள் செய்து வருகின்றனா்.