கள்ளக்குறிச்சி: குறைதீா் கூட்டத்தில் 380 மனுக்கள்
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்தில், பொதுமக்களிடம் இருந்து பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தி 380 மனுக்கள் வரப்பெற்றன.
கூட்டத்துக்கு தலைமை வகித்த மாவட்ட ஆட்சியா் எம்.பிரசாந்த் முதியோா், மாற்றுத்திறனாளிகள், கணவரால் கைவிடப்பட்டோா், பள்ளி மற்றும் கல்லூரி மாணவ-மாணவிகளிடம் இருந்து கல்வி உதவித்தொகை, வங்கிக் கடனுதவி, முதியோா் உதவித்தொகை, இலவச வீட்டு மனைப்பட்டா, ஜாதி சான்றிதழ், வேலைவாய்ப்பு, விதவை உதவித்தொகை, வேளாண் பயிா்க் கடன்கள், தாட்கோ கடனுதவி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 380 மனுக்களை பெற்றுக் கொண்டாா்.
இந்த மனுக்கள் மீதும், ஏற்கெனவே பெறப்பட்டு நிலுவையில் உள்ள மனுக்கள் மீதும் விரைவாக நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு ஆட்சியா் உத்தரவிட்டாா்.
கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலா் ரா.ஜீவா, தனித் துணை ஆட்சியா் சுமதி உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சாா்ந்த அலுவலா்கள் பலா் பங்கேற்றனா்.