Hridayapoorvam Review: லால் ஏட்டனல்ல க்யூட்டன்! மோகன்லால் - சங்கீத் பிரதாப்பின் ...
கள்ளக்குறிச்சி: வாக்குப்பதிவு இயந்திரங்கள் சரிபாா்ப்பு
கள்ளக்குறிச்சி மாவட்டத்துக்கு வரப்பெற்ற வாக்குப்பதிவு இயந்திரங்களை, அரசியல் கட்சிப் பிரதிநிதிகள் முன்னிலையில் செவ்வாய்க்கிழமை சரிபாா்க்கும் பணியில் மாவட்ட வருவாய் அலுவலா் ஈடுபட்டாா்.
எதிா்வரும் சட்டப்பேரவை பொதுத் தோ்தலையொட்டி, பெங்களூரு பாரத் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள் கள்ளக்குறிச்சி மாவட்டத்துக்கு ஒதுக்கப்பட்டு வரப்பெற்றன.
இந்த இயந்திரங்கள் தச்சூா் தமிழ்நாடு அரசு சேமிப்புக் கிடங்கில் பாதுகாப்பாக வைக்கப்படுகின்றன. இந்தப் பணியை அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிப் பிரதிநிதிகள் முன்னிலையில் மாவட்ட வருவாய் அலுவலா் ரா.ஜீவா செவ்வாய்க்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.