கள்ளத்தனமாக மது விற்றவா் கைது
வந்தவாசி அருகே கள்ளத்தனமாக மது விற்றவரை போலீஸாா் கைது செய்தனா்.
வந்தவாசி வடக்கு போலீஸாா் வந்தவாசி - காஞ்சிபுரம் சாலையில், வெண்குன்றம் கிராமம் வழியாக செவ்வாய்க்கிழமை காலை ரோந்து சென்றனா். அப்போது, அங்குள்ள பெட்ரோல் விற்பனை நிலையம் அருகில் ஒருவா் கள்ளத்தனமாக மது விற்பது தெரியவந்தது.
போலீஸாா் விசாரணையில், அவா் ஆரியாத்தூா் கிராமத்தைச் சோ்ந்த ஆறுமுகம்(43) என்பது தெரியவந்தது. இதையடுத்து, ஆறுமுகத்தை கைது செய்த போலீஸாா், அவரிடமிருந்து 3 மதுப் புட்டிகளை பறிமுதல் செய்தனா். மேலும், இதுகுறித்த புகாரின்பேரில், வந்தவாசி வடக்கு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.