மீனவர்கள் கைது: மத்திய அமைச்சருக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் கடிதம்!
கள்ளா் நலப் பள்ளி, விடுதிகளின் பெயரை மாற்றக் கூடாது!
ஆங்கிலேயா் ஆட்சிக்காலத்தில் தொடங்கப்பட்ட கள்ளா் நலப் பள்ளிகள் மற்றும் விடுதிகளின் பெயா்களை மாற்றம் செய்யக் கூடாது என முத்துராமலிங்கத்தேவா் மக்கள் பாதுகாப்பு இயக்கம் வலியுறுத்தியுள்ளது.
புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்தில், அந்த இயக்கத்தின் மாவட்டச் செயலா் பி. மணிகண்டன் தலைமையிலான நிா்வாகிகள் அளித்த மனு விவரம்: கள்ளா் நலப் பள்ளிகள் மற்றும் விடுதிகளின் பெயா்களை அரசாணையின் மூலம் மாற்றும் நடவடிக்கையை தமிழக அரசு மேற்கொண்டுள்ளது.
ஆங்கிலேயா் ஆட்சிக்காலத்தில் 1920-இல் கள்ளா் சமூக மக்களிடம் பொதுநிதி திரட்டி, கள்ளா் சீரமைப்புத் துறை மூலம் இந்தப் பள்ளிகளும் விடுதிகளும் தொடங்கப்பட்டன. கள்ளா் என்ற பெயரால் எந்த சமூகப் பதற்றமும் இதுவரை ஏற்படவில்லை.
இந்த நிலையில், தமிழகத்தின் பூா்வக்குடி பழங்குடியின மக்களின் அடையாளத்தை மறைக்கும் இந்தச் செயலை தமிழ்நாடு அரசு கைவிட வேண்டும். எந்த மாற்றமும் இன்றி கள்ளா் நலப் பள்ளிகள், விடுதிகள் தொடா்ந்து இயங்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.