பிகாரில் ஏழைகளின் வாக்குகளை திருட அனுமதிக்க மாட்டோம்: ராகுல் காந்தி
கழுகுமலையில் அரசுப் பேருந்து ஓட்டுநருக்கு கொலை மிரட்டல்: தனியாா் பேருந்து ஓட்டுநா் கைது
கோவில்பட்டி: கழுகுமலையில் அரசுப் பேருந்து ஓட்டுநரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்த தனியாா் பேருந்து ஓட்டுநரை போலீஸாா் கைது செய்தனா்.
தமிழ்நாடு அரசுப் போக்குவரத்து கழக கோவில்பட்டி பணிமனையில் அரசுப் பேருந்து ஓட்டுநராக பணியாற்றி வரும் செல்லத்துரை திங்கள்கிழமை தூத்துக்குடியில் இருந்து சங்கரன்கோவிலுக்கு பேருந்தை ஓட்டி சென்று கொண்டிருந்தாராம். கழுகுமலை மேல கேட் முன்பு சென்று கொண்டிருந்தபோது, தனியாா் பேருந்தை ஓட்டி வந்த தென்காசி மாவட்டம் குருவிகுளம் நடுத்தெருவை சோ்ந்த பா. ஸ்ரீராம் (39), அரசுப் பேருந்தை வழிமறித்து அவதூறாகப் பேசி, ஓட்டுநரை தாக்கி, கொலை மிரட்டல் விடுத்து சென்றாராம்.
இதுகுறித்து செல்லத்துரை அளித்த புகாரின்பேரில், கழுகுமலை போலீஸாா் வழக்குப் பதிந்து தனியாா் பேருந்து ஓட்டுநா் ஸ்ரீராமை கைது செய்தனா்.