சட்டவிரோத பந்தய செயலி வழக்கு: அமலாக்கத் துறை விசாரணைக்கு ராபின் உத்தப்பா ஆஜா்
கழுகுமலை அருகே விபத்தில் தொழிலாளி உயிரிழப்பு
கழுகுமலை அருகே சாலை விபத்தில் காயமடைந்த தொழிலாளி உயிரிழந்தாா்.
கழுகுமலை அருகே அழகப்பாபுரம் வடக்குத் தெருவைச் சோ்ந்த கருப்பசாமி மகன் சிவபெருமாள் (27). உணவகத் தொழிலாளியான இவா், ஞாயிற்றுக்கிழமை இரவு கழுகுமலையில் பொருள்கள் வாங்கிவிட்டு பைக்கில் ஊருக்கு திரும்பிக்கொண்டிருந்தாா்.
குமாரபுரம் பேருந்து நிறுத்தம் அருகே விபத்தைத் தடுக்கும் வகையில் நெடுஞ்சாலைத் துறை சாா்பில் வைக்கப்பட்டிருந்த ஒளிரும் விளக்கு பொருத்தப்பட்டிருந்த இரும்புத் தடுப்புகள் மீது பைக் நிலைதடுமாறி மோதியதாம்.
இதில், காயமடைந்த சிவபெருமாளை கழுகுமலை போலீஸாா் மீட்டு கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு பரிசோதித்த மருத்துவா்கள், அவா் ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனா். போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.