செய்திகள் :

கவின் ஆணவக் கொலை: காவல் உதவி ஆய்வாளர் கைது!

post image

திருநெல்வேலி ஐடி ஊழியர் கவின் கொலை வழக்கில், பெண்ணின் தந்தையும் காவல் உதவி ஆய்வாளருமான சரவணன் கைது செய்யப்பட்டுள்ளார்.

வேறு சாதிப் பெண்ணை காதலித்ததற்காக கவின் செல்வகணேஷ் என்ற இளைஞர் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஆணவக் கொலை செய்யப்பட்டார்.

இந்த கொலையை செய்த பெண்ணின் சகோதரர் சுர்ஜித், பாளையங்கோட்டை காவல் நிலையத்தில் சரணடைந்த நிலையில், வன்கொடுமை தடுப்புச் சட்டம் மற்றும் குண்டர் சட்டத்தில் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.

காவல் உதவி ஆய்வாளர்களான சுர்ஜித்தின் பெற்றோர் சரவணன் மற்றும் கிருஷ்ணகுமாரிக்கும் கொலையில் தொடர்பு இருப்பதாக கவினின் பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில், முதல் தகவல் அறிக்கையில் அவர்களின் பெயரும் சேர்க்கப்பட்டு, பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.

இதனைத் தொடர்ந்து, சுதந்திரமான, நியாயமான மற்றும் பாரபட்சமற்ற விசாரணையை உறுதி செய்வதற்காக, இந்த வழக்கு குற்றப்பிரிவு, குற்றப் புலனாய்வுத்துறைக்கு (சிபிசிஐடி) மாற்றுவதாக தமிழக அரசு நேற்று பிற்பகல் அறிவித்திருந்தது.

இந்த நிலையில், நேற்றிரவு சுர்ஜித்தின் தந்தை சரவணனை சிபிசிஐடி காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Saravanan, the woman's father and police SI, has been arrested in the murder case of Tirunelveli IT employee Kavin.

இதையும் படிக்க : பஹல்காம் தாக்குதல் குறித்து ஐ.நா. அறிக்கை: பாகிஸ்தானின் பயங்கரவாத சதி அம்பலம்

பாமக பொதுக்குழுக் கூட்டம்: அன்புமணி அழைப்பு

வரும் ஆக. 9 ஆம் தேதி நடைபெறவுள்ள பாமக பொதுக்குழுக் கூட்டத்திற்கு அந்தக் கட்சியின் தலைவர் அன்புமணி மற்றும் பொதுச் செயலாளர் வடிவேல் ராவணன் கூட்டாக தொண்டர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளனர்.இது குறித்து பாமக... மேலும் பார்க்க

கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருள்கள் விற்பனையைக் கண்டுகொள்ளாமல் இருக்கிறது திமுக அரசு: அண்ணாமலை

கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருள்கள் விற்பனையைக் கண்டுகொள்ளாமல் திமுக அரசு இருக்கிறது என்று பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது எக்ஸ தளத்தில், தூத்துக்குடி மாவட்டம், பண்டு... மேலும் பார்க்க

ஆக. 7-ல் தென்காசி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை!

தென்காசி: சங்கரன்கோவில் சங்கர நாராயணர் கோயில் ஆடித்தபசு விழாவை முன்னிட்டு தென்காசி மாவட்டத்துக்கு வரும் ஆக. 7 ஆம் தேதி உள்ளூர் விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது.தென்காசி சங்கரன்கோவில் சங்கர நாராயணர் கோ... மேலும் பார்க்க

பிரபல கல்வியாளர் வசந்தி தேவி மறைவு: முதல்வர் ஸ்டாலின் இரங்கல்

பிரபல கல்வியாளர் வசந்தி தேவி மறைவுக்கு முதல்வர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் விடுத்துள்ள இரங்கல் செய்தியில், மூத்த கல்வியாளரான பேராசிரியர் வசந்தி தேவி மரணமடைந்த செய்தியறிந்து மி... மேலும் பார்க்க

தங்கையை திட்டிய மைத்துனரின் வீட்டிற்கு தீவைத்த சகோதரர்கள்!

தங்கையை திட்டிய மைத்துனரின் வீட்டிற்கு தீவைத்த சகோதரர்களால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள எட்டுபுளிகாடு கிராமத்தைச் சேர்ந்தவர் சதீஷ் வயது (35). கடந்த ... மேலும் பார்க்க

தேசிய திரைப்பட விருதுகள்! சிறந்த தமிழ்ப்படம் உள்பட 3 விருதுகளுடன் பார்க்கிங் அசத்தல்!

தேசிய திரைப்பட விருதுகளில் சிறந்த தமிழ்ப்பட விருது உள்பட இரு விருதுகளை பார்க்கிங் திரைப்படம் பெற்றுள்ளது.2023-ல் வெளியான பார்க்கிங் படத்துக்கு திரையரங்கு மட்டுமில்லாது, ஓடிடி தளங்களிலும் நல்ல வரவேற்பு... மேலும் பார்க்க