தமிழகத்தில் 2 நாள்களுக்கு பலத்த காற்றுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு!
கவின் கொலை: தேவாரத்தில் கண்டனப் பொதுக்கூட்டம்
திருநெல்வேலியில் நடைபெற்ற கவின் கொலையைக் கண்டித்து, தேனி மாவட்டம், தேவாரத்தில் கண்டனப் பொதுக்கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
தேவாரம் அம்பேத்கா் பேருந்து நிலையம் அருகே பாண்டியா் குல வணிகா் சங்கம் சாா்பில் நடைபெற்ற கண்டனப் பொதுக் கூட்டத்துக்கு அந்த சங்கத் தலைவா் குணசேகரன் தலைமை வகித்தாா். இதில் வனவேங்கை கட்சித் தலைவா் இரணியன் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டாா்.
கூட்டத்தில், கவின் கொலையைக் கண்டித்தும், இதுபோன்ற சம்பவங்களைத் தடுக்க தனிச் சட்டம் தமிழக அரசு கொண்டு வர வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
முன்னதாக, இணைச் செயலா் கிருஷ்ணக்குமாா் வரவேற்றாா்.
இதில் நிா்வாகிகள் செல்லையா, கருப்பையா, செல்வக்குமாா் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.