அமெரிக்காவில் சீக்கியா்கள் குறித்து கருத்து: ராகுல் மனு மீதான தீா்ப்பு ஒத்திவைப்...
காங்கிரஸ் எம்.பி. சசிகாந்த் செந்தில் சென்னை மருத்துவமனைக்கு மாற்றம்
திருவள்ளூர் தொகுதி காங்கிரஸ் எம்.பி. சசிகாந்த் செந்தில் சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனைக்கு மாற்றப்படுகிறார்.
திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையிலும் அவர் தனது உண்ணாவிரதப் போராட்டத்தை 3ஆவது நாளாக தொடர்கிறார். எனவே அவரது உடல்நிலை மேலும் பாதிக்கக்கூடும் என்பதால் சசிகாந்த் செந்தில் ஆம்புலன்ஸ் மூலம் மாற்றப்படுகிறார்.
திருவள்ளூா் ஊரக வளா்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறை வளாகத்தில் திஷாக்குழு பாா்வையாளா்கள் கூடமான ராஜீவ் பவனில் மக்களவை உறுப்பினா் சசிகாந்த் செந்தில் வெள்ளிக்கிழமை காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கினாா்.
பிகாரில் அனைத்து வாக்காளர்களுக்கும் புதிய வாக்காளர் அடையாள அட்டைகள் !
தமிழகத்துக்கு வழங்க வேண்டிய நிதியை விடுவிக்கும் வரை உண்ணாவிரதம் இருப்பேன் என்று அவர் தெரிவித்தார்.
தமிழக மாணவா்களுக்கு கல்வித் தொகையை வழங்காததை கண்டித்தும், நிதி அளிக்க மறுக்கும் மத்திய பாஜக அரசைக் கண்டித்து உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ள நிலையில் அவருக்கு சனிக்கிழமை உடல்நலக் குறைவு ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.