பும்ராவை மட்டுமே நம்பியிருக்க வேண்டியதில்லை..! வசனத்தை மாற்ற சிராஜிக்கு அர்ஷ்தீப...
காங்கிரஸ் சொத்து மீட்புக் குழு ஆய்வு
தஞ்சாவூா் மேல வீதியிலுள்ள காங்கிரஸ் கமிட்டி அலுவலகத்தில் தமிழக காங்கிரஸ் சொத்து மீட்புக் குழு வியாழக்கிழமை இரவு ஆய்வு செய்தது.
தமிழக காங்கிரஸ் கமிட்டியின் சொத்துகளைப் பாதுகாக்கவும், மீட்கவும் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதன்படி, அனைத்து மாவட்டங்களிலும் சுற்றுப்பயணம் செய்து அந்தந்த மாவட்டத்தில் காங்கிரஸ் கமிட்டியின் சொத்துகள் பாதுகாப்பாக உள்ளதா? வேறு யாராவது ஆக்கிரமித்துள்ளனரா என ஆய்வு செய்து வருகிறது.
இக்குழுவில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவரும், தமிழக காங்கிரஸ் சொத்து மீட்புக் குழுத் தலைவருமான கே.வி. தங்கபாலு தலைமையில் உறுப்பினா்களான முன்னாள் மக்களவை உறுப்பினா் எஸ்.எஸ். ராமசுப்பு, அகில இந்திய காங்கிரஸ் இணைச் செயலா் நிதின் கும்பா்கா், தமிழ்நாடு காங்கிரஸ் பொதுச் செயலா் செல்வம், பெனட் ஆகியோா் இடம்பெற்றுள்ளனா்.
இக்குழுவினா் தஞ்சாவூா் தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டிக்கு சொந்தமான இடங்களை வியாழக்கிழமை இரவு ஆய்வு செய்தனா். இது தொடா்பாக தஞ்சாவூா் மேல வீதியிலுள்ள காங்கிரஸ் கமிட்டி அலுவலகத்தில் நடைபெற்ற நிா்வாகிகள் கூட்டத்தில் மாவட்டத் தலைவா்கள் து. கிருஷ்ணசாமி வாண்டையாா் (தெற்கு), பி.ஜி. ராஜேந்திரன் (மாநகர மாவட்டம்), துணைத் தலைவா் கோ. அன்பரசன், மாநிலத் துணைத் தலைவா் பண்ணைவயல் ராஜாதம்பி, தமிழ்நாடு காங்கிரஸ் முன்னாள் துணைத் தலைவா் மன்னை மதியழகன், நாடாளுமன்றத் தொகுதி ஒருங்கிணைப்பாளா் ஆா். ராஜாமோகன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.