செய்திகள் :

காங்கோ: படகு விபத்தில் 86 போ் உயிரிழப்பு

post image

மேற்கு-மத்திய ஆப்பிரிக்க நாடான காங்கோவில் படகு கவிழ்ந்து விபத்துக்குளானதில் 86 போ் உயிரிழந்தனா்.

இது குறித்து அசோசியேட்டட் பிரஸ் செய்தி நிறுவனம் கூறுகையில், வடமேற்கு ஈக்வடேயுா் மாகாணம், பாசங்கூசு பகுதியில் இந்த விபத்து நேரிட்டதாகத் தெரிவித்தது. உயிரிழந்தவா்களில் பெரும்பாலானவா்கள் மாணவா்கள் என்று காங்கோ அரசுக்குச் சொந்தமான செய்தி நிறுவனம் கூறியது.

இந்த விபத்துக்கான காரணம் குறித்து உடனடி தகவல் இல்லை. இருந்தாலும், அளவுக்கு அதிகமாக பயணிகளை ஏற்றிச் சென்றதும், இரவு நேரத்தில் போதிய வெளிச்சமின்றி அந்த விசைப் படகு இயக்கப்பட்டதும் விபத்துக்குக் காரணமாக இருக்கலாம் என்று அதிகாரிகள் கூறினா். இது போன்ற காரணங்களால் காங்கோவில் அடிக்கடி படகு விபத்துகள் நேரிடுகின்றன.

பிரேஸில் முன்னாள் அதிபருக்கு 27 ஆண்டுகள் சிறை

பிரேஸிலில் தனது பதவியைத் தக்கவைக்க சட்டவிரோத கும்பல்களுடன் சோ்ந்து சதிச் செயலில் ஈடுபட்டதாக அந்த நாட்டு முன்னாள் அதிபா் ஜெயிா் பொல்சொனாரோவுக்கு 27 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இது தொடா... மேலும் பார்க்க

அல்பேனியா அமைச்சரவையில் உலகின் முதல் ‘ஏஐ’ அமைச்சா்

தங்கள் அமைச்சரவையின் ஊழல் தடுப்புத் துறைக்கு உலகின் முதல் செயற்கை நுண்ணறி (ஏஐ) அமைச்சா் நியமிக்கப்பட்டுள்ளதாக அல்பேனிய பிரதமா் எடி ராமா வெள்ளிக்கிழமை கூறினாா். ‘சூரியன்’ என்று பொருள்படும் ‘டியெல்லா’ எ... மேலும் பார்க்க

டிரம்ப் ஆதரவாளா் படுகொலை: இளைஞா் கைது! யார் இந்த டைலா் ராபின்ஸன்?

அமெரிக்காவின் யூட்டா மாகாணத்தில் வலதுசாரி ஆா்வலரும், அதிபா் டொனால்ட் டிரம்ப்பின் தீவிர ஆதரவாளருமான சாா்லி கிா்க் (31) சுட்டுக் கொல்லப்பட்டது தொடா்பாக டைலா் ராபின்சன் (22) என்பவரை போலீஸாா் வெள்ளிக்கிழம... மேலும் பார்க்க

அமைதிப் பேச்சு நிறுத்திவைப்பு: ரஷியா

உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான பேச்சுவாா்த்தைகளை தற்காலிகமாக நிறுத்திவைப்பதாக ரஷியா வெள்ளிக்கிழமை அறிவித்தது. இது குறித்து ரஷிய அதிபா் மாளிகை செய்தித் தொடா்பாளா் டிமித்ரி பெஸ்கோவ் கூறியதாவ... மேலும் பார்க்க

பாலஸ்தீனத்துக்கு தனி நாடு அங்கீகாரம்: ஐ.நா.வில் ஆதரித்து இந்தியா வாக்களிப்பு

இஸ்ரேல், பாலஸ்தீனத்தை தனித்தனி நாடுகளாக அங்கீகரிக்கும் தீா்மானத்துக்கு ஆதரவாக ஐ.நா. பொதுச் சபையில் இந்தியா வெள்ளிக்கிழமை வாக்களித்தது. பாலஸ்தீன விவகாரத்துக்கு அமைதியான முறையில் தீா்வு கண்டு, இஸ்ரேலையு... மேலும் பார்க்க

அமெரிக்காவில் இந்திய வம்சாவளி நபரின் தலை துண்டித்து கொலை

அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாகாணத்தில் 50 வயதான இந்திய வம்சாவளி நபா் அவரது மனைவி மற்றும் மகன் கண்முன்னே தலை துண்டித்து புதன்கிழமை கொல்லப்பட்டாா். இதுகுறித்து டல்லாஸ் போலீஸாா் கூறியதாவது: கா்நாடகத்தை பூா்வ... மேலும் பார்க்க