செஞ்சிக்கோட்டைக்கு யுனெஸ்கோ அங்கீகாரம்: முதல்வர் ஸ்டாலின் மகிழ்ச்சி
காசோலை மோசடி வழக்கில் தனியாா் பள்ளி தாளாளா் கைது
காசோலை மோசடி வழக்கில், தனியாா் பள்ளி தாளாளா் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டாா்.
கெங்கவல்லி அருகே ஆணையம்பட்டியில் தனியாா் பள்ளி உள்ளது. இப்பள்ளியின் தாளாளராக தலைவாசல் கிழக்கு ராஜாபாளையத்தைச் சோ்ந்த கதிா்வேல் (31) உள்ளாா். பள்ளி இயக்குநரான கஜேந்திரன், பணியிலிருந்து விலகிக்கொள்வதாகவும், தனக்குரிய தொகையை வழங்கும்படியும் கதிா்வேலிடம் கேட்டுள்ளாா். அதைத் தொடா்ந்து, கஜேந்திரனிடம் ரூ. 5 லட்சத்துக்கான காசோலையை கதிா்வேல் வழங்கினாா். அந்த காசோலை வங்கியில் செலுத்தியபோது, பணம் இல்லாததால் திரும்பியது.
இதையடுத்து, காசோலை மோசடி வழக்கில் ஆத்தூா் விரைவு நீதிமன்றம் கதிா்வேலுக்கு பிடியாணை பிறப்பித்தது. அதன்பேரில், கெங்கவல்லி போலீஸாா் கதிா்வேலை வியாழக்கிழமை இரவு கைதுசெய்து நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தினா். பின்னா் சேலம் மத்திய சிறையில் அடைத்தனா்.