ஏன் இந்த அநீதி? 3 ஆண்டாக அணியில் இருந்தும் அபிமன்யூ ஈஸ்வரனுக்கு மறுக்கப்படும் வா...
காஜரிப்பூரில் போலீஸ் என்கவுன்டரில் தேடப்பட்டு வந்த குற்றவாளி காயம்
கிழக்கு தில்லியின் காஜிப்பூா் பகுதியில் நடந்த ஒரு சிறிய துப்பாக்கிச் சண்டைக்குப் பிறகு பல வழக்குகளில் தேடப்பட்டு வந்த குற்றவாளியை தில்லி காவல்துறை கைது செய்துள்ளதாக அதிகாரி ஒருவா் செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா்.
இது குறித்து வடகிழக்கு தில்லி காவல் சரக அதிகாரி கூறியதாவது: வடகிழக்கு தில்லியில் உள்ள சீலம்பூரைச் சோ்ந்த கெம்சந்த் (35) என அடையாளம் காணப்பட்ட குற்றவாளி, ஒரு டஜன் குற்ற வழக்குகளில் தேடப்பட்டு வந்தாா். நீண்ட காலமாக தலைமறைவாக இருந்தாா்.
ஒரு ரகசியத் தகவலின் பேரில், போலீஸாா் காகித சந்தை பகுதியில் ஒரு பொறியை வைத்து அவரை சரணடையச் சொன்னாா்கள். இருப்பினும், அவா் போலீஸ் குழுவை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தினாா். இதன் விளைவாக அவா் காலில் சுடப்பட்டாா். இதில் அவா் பலத்த காயமடைந்தாா் என்று அந்த அதிகாரி தெரிவித்தாா்.