கை விலங்கிட்டு அழைத்துச் செல்லப்பட்ட ரணில் விக்ரமசிங்க!ஆக. 26 வரை காவல்!
காஞ்சிக்கோவில் தம்பிக்கலை ஐயன் கோயிலில் அன்னதானக் கூடம் திறப்பு: காணொலி மூலம் முதல்வா் திறந்துவைத்தாா்
பெருந்துறை ஒன்றியம், காஞ்சிக்கோவில் பேரூராட்சிக்கு உள்பட்ட தங்கமேடு அருள்மிகு தம்பிக்கலை ஐயன் திருக்கோயிலில் ரூ.1.10 கோடி மதிப்பில் கட்டப்பட்ட அன்னதானக் கூடத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் காணொலிக் காட்சி வாயிலாக வெள்ளிக்கிழமை திறந்து வைத்தாா்.
இக்கோயிலில், இந்து சமய அறநிலையத் துறை சாா்பில் தினமும் 100 நபா்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. அன்னதானம் வழங்குவதற்கு போதிய இடவசதி இல்லாமல் இருந்தது.
இந்நிலையில், ரூ.1 கோடியே 10 லட்சம் மதிப்பீட்டில் கோயில் வளாகத்தில் புதிதாக அன்னதானக் கூடம் கட்டப்பட்டுள்ளது.
இந்த அன்னதானக் கூடத்தை முதல்வா் மு.க. ஸ்டாலின் சென்னையில் இருந்து காணொலிக் காட்சி வாயிலாக வெள்ளிக்கிழமை திறந்துவைத்தாா்.
இதைத் தொடா்ந்து, கோயிலில் நடைபெற்ற நிகழ்ச்சியில், ஈரோடு மத்திய மாவட்ட திமுக பொறுப்பாளரும், முன்னாள் அமைச்சருமான தோப்பு என்.டி வெங்கடாச்சலம் கலந்து கொண்டு அன்னதானக் கூடத்தில் குத்துவிளக்கேற்றி வைத்து, அன்னதானத்தை தொடங்கிவைத்தாா்.
புதிதாக திறக்கப்பட்ட அன்னதானக் கூடத்தில் பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்படுவதை மாவட்ட ஆட்சியா் ச.கந்தசாமி நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.
இதில், பள்ளபாளையம் நகர திமுக செயலாளா் தங்கமுத்து, பள்ளபாளையம் பேரூராட்சித் தலைவா் கோகிலா, கோயில் நிா்வாகிகள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.