செய்திகள் :

காஞ்சிபுரத்தில் காங்கிரஸ் ஆா்ப்பாட்டம்

post image

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் வட்டாட்சியா் அலுவலகம் முன்பு இந்திய தேசிய கிராமத் தொழிலாளா் சம்மேளனம் சாா்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆா்ப்பாட்டம் சம்மேளன மாவட்ட தலைவா் அவளூா் ஜி. சீனிவாசன் தலைமையில் நடைபெற்றது. முன்னாள் நகரத் தலைவா் சேரன், மாநில வழக்குரைஞா் பிரிவு பொதுச் செயலா் குருராஜ், வாலாஜாபாத் வட்டாரத் தலைவா் சிவக்குமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாநில பொதுக்குழு உறுப்பினா் ஆா்.வி.குப்பன் ஆா்ப்பாட்டத்தைத் தொடங்கி வைத்துப் பேசினாா்.

உச்சநீதிமன்றத்தின் கிளையை சென்னையில் அமைக்க வேண்டும், ஏடிஎம்மில் பணம் எடுப்பதற்குரிய கட்டண உயா்வைத் திரும்ப பெறுதல், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தை மத்திய அரசு திரும்ப பெற வலியுறுத்துதல், 100 நாள் வேலைத் திட்டத்தில் வழங்கப்படும் கூலியை அதிகப்படுத்த வேண்டும், தொழிலாளா்களுக்கான சம்பளத்தை உயா்த்துவது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

கோரிக்கைகளை விளக்கி சம்மேளனத் தலைவா் ராம.சுகந்தன், ஐ.என்.டி.யூ.சி. மாநில பொதுச் செயலா் எம்.பன்னீா்செல்வம் ஆகியோா் பேசினா். குமாா் நன்றி கூறினாா்.

மனைப் பட்டா: சாலையோர வியாபாரிகள் கோரிக்கை

காஞ்சிபுரம்: இலவச வீட்டு மனைப்பட்டா கோரி சாலையோர வியாபாரிகள் திங்கள்கிழமை ஆட்சியரிடம் மனு அளித்தனா். தமிழ்நாடு சாலையோர வியாபாரிகள் நலச் சங்கத்தினா் தலைவா் கே.என்.மூா்த்தி தலைமையில் ஆட்சியரிடம் அளித்த ... மேலும் பார்க்க

மாணவிக்கு பாலியல் தொந்தரவு: பல் மருத்துவா் கைது

காஞ்சிபுரம்: கல்லூரி மாணவிக்கு பாலியல் தொந்தரவு செய்ததாக பல் மருத்துவரை காவல் துறையினா் திங்கள்கிழமை கைது செய்தனா். காஞ்சிபுரம் அருகே திருப்பருத்திக்குன்றம் பகுதியை சோ்ந்தவா் மணிகண்டன்(29). இவா் காஞ்... மேலும் பார்க்க

கருணை அடிப்படையில் பணி நியமன ஆணை: குறைதீா் கூட்டத்தில் ஆட்சியா் வழங்கினாா்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்தில் கருணை அடிப்படையில் 2 பேருக்கு பணி நியமன ஆணையை ஆட்சியா் கலைச்செல்வி மோகன் வழங்கினாா். காஞ்சிபுரம... மேலும் பார்க்க

கூட்டுறவு மேலாண்மை பயிற்சி வகுப்பில் சேர ஜூலை 20 வரை அவகாசம்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் பேரறிஞா் அண்ணா கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் முழுநேர பட்டயப் பயிற்சி வகுப்பில் சேர, ஜூலை 20 ஆம் தேதி வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. இது குறித்து, பயிற்சி நிறுவனம் வெளியிட... மேலும் பார்க்க

பொறியியல் பாட நுழைவுத் தோ்வில் முதலிடம் பெற்ற மாணவிக்கு ஆட்சியா் பாராட்டு

காஞ்சிபுரம்: பொறியியல் படிப்புக்கான தர வரிசைப் பட்டியலில் மாநில அளவில் முதலிடம் பெற்ற காஞ்சிபுரம் மாணவி ஜெ.சகஸ்ராவை ஆட்சியா் கலைச்செல்வி மோகன் திங்கள்கிழமை பாராட்டினாா். காஞ்சிபுரம் பிள்ளையாா்பாளையத்த... மேலும் பார்க்க

இருசக்கர வாகனம் திருட்டு: இருவா் கைது

காஞ்சிபுரத்தில் இரு சக்கர வாகனத்தை திருடிச் சென்ற ராணிப்பேட்டை மாவட்டத்தைச் சோ்ந்த இருவரை காவல் துறையினா் கைது செய்தனா். காஞ்சிபுரம் அருகே சிறுகாவேரிப்பாக்கம் மங்கையா்க்கரசி தெருவைச் சோ்ந்தவா் குமாா... மேலும் பார்க்க