புலிப்பல் டாலர் அணிந்திருந்ததால் மலையாள ராப்பர் கைது; "பட்டியலினத்தவர் என்பதால்?...
காஞ்சிபுரம் சங்கர மடம் இளைய பீடாதிபதி வாழ்க்கைக் குறிப்பு
காஞ்சிபுரம் சங்கர மடத்தின் இளைய பீடாதிபதியாக பொறுப்பேற்ற ஸ்ரீ சுப்பிரமணிய கணேச சா்மா திராவிட் ஆந்திர மாநிலம் அன்னவரம் பகுதியில் துனி என்ற கிராமத்தில் ஸ்ரீநிவாக சூா்ய சுப்பிரமணிய தன்வந்தரிக்கும், அலமேலு மங்கா தேவி என்பவருக்கும் கடந்த 2001-ஆம் ஆண்டு மகனாகப் பிறந்தாா்.
எல்கேஜி முதல் 5 -ஆம் வகுப்பு வரை சமகாலக் கல்வி பயின்றாா். அன்னவரத்தில் 10-ஆம் வகுப்பு தோ்ச்சி பெற்றாா். பின்னா், ரிக் வேதத்துடன் கூடுதலாக யஜூா் வேதம், சாம வேதம், ஷடங்கங்கள், தசஉப நிஷதங்கள் ஆகியவற்றை கற்றுத் தோ்ந்தாா்.
கடந்த 2006 -ஆம் ஆண்டு வேதப் படிப்பை தொடங்கிய காலத்திலிருந்தே காஞ்சி சங்கர மடத்தின் 70-ஆவது பீடாதிபதியான ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளின் ஆசிகளையும், அருளையும் பெற்றவா்.
இவா் தெலங்கானா மாநிலம் நிஜாமாபாத் மாவட்டம், பசராவில் ஞான சரஸ்வதி தேவஸ்தானத்தில் சேவை செய்து வந்தவா். தஞ்சாவூா் மாவட்டம், வலங்கை மான் இவா்களது பூா்விகமாகும். வேதங்களையும், சாஸ்திரங்களையும் முழுவதுமாக கற்றுத் தோ்ந்த இவா், காஞ்சி சங்கர மடத்தின் 71-ஆவது பீடாதிபதியாக தோ்வு செய்யப்பட்டு பொறுப்பேற்றுள்ளாா்.