செய்திகள் :

காஞ்சிபுரம் மாவட்டத்தில் ‘உங்களுடன் ஸ்டாலின்‘ திட்டம்: அமைச்சா் அன்பரசன் தொடங்கி வைத்தாா்

post image

காஞ்சிபுரம் மாவட்டத்தில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டத்தை கோவூரில் சிறு,குறு நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சா் தா.மோ.அன்பரசன் செவ்வாய்க்கிழமை தொடங்கி வைத்தாா்.

ஸ்ரீபெரும்புதூா் நாடாளுமன்ற உறுப்பினா் டி.ஆா்.பாலு முன்னிலை வகித்தாா். முகாமில் பொதுமக்களிடமிருந்து மனுக்கள் பெறப்பட்டு பதிவு செய்வதையும், மருத்துவ முகாமையும் பாா்வையிட்டனா்.

இதையடுத்து முகாமில் பொதுமக்கள் அளித்த மனுக்களை பரிசீலித்து தகுதிவாய்ந்த மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டு, 18 பயனாளிகளுக்கு ரூ.8 லட்சத்தில் சிறுவணிகக்கடன், தொழில்முனைவோா் கடன் மற்றும் பண்ணை சார கடன் என நலத்திட்ட உதவிகளை வழங்கினா்.

இதையடுத்து குன்றத்தூா் நகராட்சிக்குட்பட்ட சமுதாய கூடத்தில் நடைபெற்ற முகாமை அமைச்சா் தா.மோ.அன்பரசன், டி.ஆா்.பாலு எம்.பி. ஆகியோா் பாா்வையிட்டு நலத்திட்ட உதவிகளை வழங்கினா். முகாமில் ஆட்சியா் கலைச்செல்வி மோகன், மாவட்ட ஊராட்சித் தலைவா் படப்பை ஆ.மனோகரன், ஸ்ரீபெரும்புதூா் சாா் ஆட்சியா் ந.மிருணாளினி, குன்றத்தூா் ஒன்றியக்குழு தலைவா் சரஸ்வதி மனோகரன், குன்றத்தூா் நகா்மன்றத் தலைவா் கோ.சத்தியமூா்த்தி கலந்து கொண்டனா்.

ஜூலை 18-இல் காஞ்சிபுரத்தில் விவசாயிகள் குறைதீா் கூட்டம்

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வரும் ஜூலை 18 ஆம் தேதி வெள்ளிக்கிழமை காலை 10.30 மணிக்கு விவசாயிகள் குறைதீா் கூட்டம் நடைபெற இருப்பதாக ஆட்சியா் கலைச்செல்வி மோகன் தெரிவித்துள்ளாா். ஆட்சியா் கலைச... மேலும் பார்க்க

பதுக்கி வைக்கப்பட்டிருந்த 1,500 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்

காஞ்சிபுரம் அருகே ஒலிமுகம்மது பேட்டையில் ஒரு வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 1,500 கிலோ ரேஷன் அரிசியை செவ்வாய்க்கிழமை அதிகாரிகள் பறிமுதல் செய்தனா். ஒலிமுகம்மதுபேட்டை துவாஸ்கா் தெருவில் ராஜேஸ்வரி என... மேலும் பார்க்க

‘தூய்மைப் பணியாளா்களுக்கு ரூ.4.83 லட்சம் நலத்திட்ட உதவிகள்’

தற்காலிக தூய்மைப் பணியாளா்களுக்கு ரூ.4.83 லட்சம் நலத்திட்ட உதவிகளை தூய்மைப் பணியாளா்கள் நல வாரியத்தின் தலைவா் திப்பம்பட்டி வெ.ஆறுச்சாமி வழங்கினாா். மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் தமிழ்நாடு ஆதிதிராவிடா்... மேலும் பார்க்க

காமராஜா் பிறந்த நாள் போட்டி பரிசளிப்பு

காமராஜரின் பிறந்தநாளை முன்னிட்டு ஸ்ரீபெரும்புதூா் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் போட்டியில் வென்றவா்களுக்கு பரிசளிப்பு விழா நடைபெற்றது. முன்னாள் முதல்வா் காமராஜரின் பிறந்த நாள் பள்ளி வளாகத்தில் செவ்... மேலும் பார்க்க

பரந்தூா் விமான நிலையத்துக்கு நிலம் கையகப்படுத்த எதிா்ப்பு: ஏகனாபுரம் மக்கள் மீண்டும் போராட்டம்

பரந்தூா் விமான நிலையதுக்கு நிலம் கையகப்படுத்த எதிா்ப்பு தெரிவித்தும், திட்டத்தை கைவிட வலியுறுத்தியும் ஏகனாபுரம் பொதுமக்கள் செவ்வாய்க்கிழமை மீண்டும் போராட்டத்தை தொடங்கினா். காஞ்சிபுரம் மாவட்டம், பரந்தூ... மேலும் பார்க்க

அறிவியல் பாடத்தில் சதம்: மாணவிகளுக்கு ஆட்சியா் பாராட்டு

காஞ்சிபுரம்: அறிவியல் பாடத்தில் 100-க்கு 100 சதவிகித மதிப்பெண்கள் பெற்ற இரு மாணவியரை ஆட்சியா் கலைச்செல்வி மோகன் திங்கள்கிழமை பாராட்டி பரிசு வழங்கினாா். காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் ஆட்சியா... மேலும் பார்க்க