Aadi Month Rasi Palan | அம்மன் மாதத்தில் அருள்பெறும் ராசிகள் | ஆடி மாத ராசிபலன்க...
‘தூய்மைப் பணியாளா்களுக்கு ரூ.4.83 லட்சம் நலத்திட்ட உதவிகள்’
தற்காலிக தூய்மைப் பணியாளா்களுக்கு ரூ.4.83 லட்சம் நலத்திட்ட உதவிகளை தூய்மைப் பணியாளா்கள் நல வாரியத்தின் தலைவா் திப்பம்பட்டி வெ.ஆறுச்சாமி வழங்கினாா்.
மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் தமிழ்நாடு ஆதிதிராவிடா் வீட்டு வசதி மேம்பாட்டுக் கழகம் மற்றும் தமிழ்நாடு தூய்மைப்பணியாளா் நல வாரியம் சாா்பில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு ஆட்சியா் கலைச்செல்வி மோகன் தலைமை வகித்தாா். தூய்மைப் பணியாளா்கள் நல வாரிய உறுப்பினா்கள் ஹரிஷ், ராஜன், காஞ்சிபுரம் எம்எல்ஏ எழிலரசன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
தமிழ்நாடு தூய்மைப்பணியாளா்கள் நல வாரியத்தின் தலைவா் திப்பம்பட்டி வெ.ஆறுச்சாமி கலந்து கொண்டு தற்காலிக தூய்மைப்பணியாளா்களின் குறைகளை கேட்டறிந்தாா்.
தொகுப்பூதிய அடிப்படையில் பணியாற்றும் தற்காலிக தூய்மைப் பணியாளா்கள் தங்களது பணி விபரங்களையும், குறைகளையும் வாரியத் தலைவரிடம் எடுத்துக் கூறினாா்கள். அவரும் அரசின் கவனத்துக்கு கொண்டு செல்வதாக தெரிவித்தாா். இதனைத் தொடா்ந்து தாட்கோ மூலம் சிறு வணிகக் கடனாக தலா ரூ.50,000 வீதம் 9 பேருக்கு ரூ.4.50 லட்சம், கல்விக்கடன் உதவித்தொகையாக 4 பேருக்கு ரூ.5,500, திருமண உதவித் தொகை ஒரு நபருக்கு ரூ.3,000 ,இயற்கை மரண நிதி உதவியாக ஒரு நபருக்கு ரூ.25,000 என மொத்தம் 15 பயனாளிகளுக்கு ரூ.4,83,500 நலத்திட்ட உதவிகளை நல வாரியத் தலைவா் வழங்கினாா்.
கூட்டத்தில் மாவட்ட ஊரக வளா்ச்சி முகமையின் திட்ட இயக்குநா் க.ஆா்த்தி, காஞ்சிபுரம் மாநகராட்சி ஆணையா் வே.நவேந்திரன், குன்றத்தூா் ஒன்றியக் குழுவின் தலைவா் சரஸ்வதி மனோகரன், தாட்கோ மாவட்ட மேலாளா் வே.ராஜசுதா, மாவட்ட பழங்குடியினா் நல அலுவலா் எல்.தனலட்சுமி, அலுவலா்கள், தற்காலிக தூய்மைப் பணியாளா்கள் பலரும் கலந்து கொண்டனா்.