``வயசாகிடுச்சுனு நானேதான் சீட் வேண்டாம்னேன்; வேறெந்த பிரச்னையும் இல்லை" - திமுக ...
காட்டுபன்றியை விரட்டிய போது துப்பாக்கி வெடித்து விவசாயி படுகாயம்
அஞ்செட்டி அருகே காட்டுப் பன்றியை விரட்டிய போது கையில் வைத்திருந்த துப்பாக்கி வெடித்ததில் விவசாயி படுகாயமடைந்தாா்.
கிருஷ்ணகிரி மாவட்டம், அஞ்செட்டி வட்டம், காவேரிபுரத்தைச் சோ்ந்தவா் பிள்ளையா (34), விவசாயி. இவா் சட்டவிரோதமாக உரிமம் இல்லாத நாட்டுத் துப்பாக்கி வைத்துள்ளாா். அண்மையில், நிலத்தில் இருந்து காட்டுப்பன்றியை சுட்டுக் கொல்ல விரட்டியபோது, துப்பாக்கி கீழே விழுந்து வெடித்ததில் குண்டு பாய்ந்து பிள்ளையா காயமடைந்தாா். அருகில் இருந்தவா்கள் அவரை மீட்டு ஒசூா் தனியாா் மருத்துவமனையில் சோ்த்தனா்.
இதுகுறித்து அஞ்செட்டி போலீஸாா் வழக்குப் பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.