மெட்ரோ ரயில்: அயனாவரம் - பெரம்பூர் சுரங்கம் தோண்டும் பணி நிறைவு!
காட்டு மாடு மோதியதில் வேன் சேதம்
கும்பக்கரை அருவி அருகே செவ்வாய்க்கிழமை காட்டு மாடு மோதியதில் வேன் சேதமடைந்தது.
கடலூா் மாவட்டம், பண்ருட்டி அருகேயுள்ள கொக்குபாளைத்தைச் சோ்ந்தவா் ஹரிகிருஷ்ணன் (54). இவா் தனது குடும்பத்தைச் சோ்ந்த 20 பேருடன் கேரளத்துக்கு சுற்றுலா சென்று விட்டு, பண்ருட்டிக்கு திங்கள்கிழமை இரவு திரும்பி புறப்பட்டனா். வேனை பண்ருட்டியைச் சோ்ந்த விநாயகம் (29) ஓட்டினாா்.
இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை காலை கும்பக்கரை அருவியில் குளிப்பதற்காக அருவி அருகே வந்தபோது மாந்தோப்பிலிருந்து வெளியே வந்த காட்டு மாடு வேன் மீது மோதியது. அப்போது, வேனின் முன்பக்கம் சேதமடைந்தது. ஆனால், வேனில் வந்த பயணிகளுக்கும், காட்டு மாடுக்கும் எந்தவித காயமும் ஏற்படவில்லை.
இதுகுறித்து பெரியகுளம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.