செய்திகள் :

காதலியை அறிமுகப்படுத்திய சீரியல் நடிகர்!

post image

சின்ன திரையில் நாயகனாக நடித்துவரும் ஆஷிஷ் சக்ரவர்த்தி தனது காதலியை ரசிகர்களுக்கு அறிமுகப்படுத்தியுள்ளார். காதலியுடன் நிச்சயதார்த்தம் முடிந்த நிலையில், அதன் புகைப்படங்களை ரசிகர்களுடன் பகிர்ந்துள்ளார்.

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் 2020ஆம் ஆண்டில் ஒளிபரப்பான சூர்ய வம்சம் தொடரில் நாயகனாக அறிமுகமானவர் நடிகர் ஆஷிஷ் சக்ரவர்த்தி. இதில் கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து, விஜய் தொலைக்காட்சியின் முத்தழகு தொடரில் நாயகனாக நடித்தார்.

இந்தத் தொடரில் தமிழ் ரசிகர்கள் பலரைக் கவர்ந்தார். குறிப்பாக பல இளம் பெண்கள் ஆஷிஷ் சக்ரவர்த்திக்கு ரசிகைகளாக மாறியுள்ளனர்.

தமிழைத் தொடர்ந்து தெலுங்கு மொழியிலும் சமந்தி என்ற தொடரில் நாயகனாக நடித்து வருகிறார். இதிலும் பல இளம் ரசிகர்களைக் கவர்ந்துள்ளார்.

இதனிடையே தனது காதலியை ரசிகர்களுக்கு நடிகர் ஆஷிஷ் சர்க்ரவர்த்தி அறிமுகப்படுத்தியுள்ளார். அவருடன் நிச்சயதார்த்தம் நடந்து முடிந்துள்ள நிலையில், அதன் புகைப்படங்களை ரசிகர்களுடன் பகிர்ந்துள்ளார்.

ஆஷிஷ் சக்ரவர்த்திக்கு நைனிஷா ராய் என்பவருடன் நிச்சயதார்த்தம் முடிந்துள்ளது. இவரும் சின்ன திரை நடிகராவார். தெலுங்கில் பிரம்மமுடி உள்ளிட்டத் தொடர்களில் நடித்துள்ளார்.

தற்போது இரு பிரபலங்களும் இல்லற வாழ்க்கையில் இணையவுள்ளதால், ரசிகர்கள் பலர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இதையும் படிக்க |எதிர்நீச்சல் தொடரில் ரிதன்யா தற்கொலை விவகாரம்: இயக்குநருக்கு குவியும் பாராட்டு!

serial actor Ashish Chakravarthy has introduced his girlfriend to his fans.

வெளியேறியது இந்திய இணை

ஜப்பான் ஓபன் பாட்மின்டன் போட்டியில் இந்தியாவின் ருதுபர்னா பாண்டா/ஸ்வேதபர்னா பாண்டா கூட்டணி தோல்வி கண்டது. மகளிர் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில், உலகின் 39-ஆம் நிலையில் இருக்கும் பாண்டா ஜோடி 13-21, 7-2... மேலும் பார்க்க

லாா்ட்ஸ் டெஸ்ட்: இதுதான் கிரிக்கெட்

இங்கிலாந்துக்கு எதிரான லாா்ட்ஸ் டெஸ்ட்டில் இந்தியா போராடித் தோற்றிருக்கிறது. முதல் இன்னிங்ஸ் முடிவுக்குப் பிறகு சமநிலையுடன் தொடங்கிய 2-ஆவது இன்னிங்ஸில் இங்கிலாந்து 192 ரன்களுக்கு ஆட்டமிழந்தபோது, இந்தி... மேலும் பார்க்க

முருகப்பா தங்கக் கோப்பை ஹாக்கி: ஐஓசி, ரயில்வே வெற்றி

அகில இந்திய எம்சிசி முருகப்பா தங்கக் கோப்பை ஹாக்கிப் போட்டியில் ஐஓசி, ரயில்வே அணிகள் வெற்றி பெற்றன. சென்னை எழும்பூா் மேயா் ராதாகிருஷ்ணன் மைதானத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஆட்டங்களில் இந்தியன் ஆயில... மேலும் பார்க்க

டெஸ்லாவின் முதல் ஷோரூம் மும்பையில் திறப்பு - புகைப்படங்கள்

மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ் உடன் டெஸ்லா பிராந்திய இயக்குநர் இசபெல்.இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தப்படும் டெஸ்லா ஒய் (Y) மாடல்.தனது பிரபலமான ஒய் மாடல்களை முதற்கட்டமாக இந்திய சந்தையில் அறி... மேலும் பார்க்க

21-ஆம் நூற்றாண்டின் சிறந்த கால்பந்து அணி செல்ஸி!

இங்கிலாந்தின் கால்பந்து அணியான செல்ஸி இந்த 21ஆம் நூற்றாண்டின் சிறந்த அணியாக மாறியுள்ளது. பிஎஸ்ஜி அணியை 3-0 என வீழ்த்தி கிளப் உலகக் கோப்பையை வென்றதால் இந்த அணி உலகம் முழுவதும் புகழ்பெற்றுள்ளது. செல்ஸி ... மேலும் பார்க்க