பெங்களூரு வேலையைத் துறந்து, விவசாயத்தில் ரூ. 2.5 கோடி ஈட்டும் பிகார் இளைஞர்!
கானாறுகளை தூா்வாரி தடுப்பணை கட்ட கோரிக்கை
மழைக்காலம் தொடங்கி விட்டதால், குடியாத்தம் வட்டத்தில் உள்ள கானாறுகளில் ஆக்கிரமிப்புகளை அகற்றி, மழை நீரை சேமிக்கும் வகையில் தடுப்பணைகளை கட்ட வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனா்.
குடியாத்தம் வட்டாட்சியா் அலுவலகத்தில், வட்ட அளவில் விவசாயிகளுக்கான குறைதீா் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு வட்டாட்சியா் கி.பழனி தலைமைவ கித்தாா். வட்ட வழங்கல் அலுவலா் பிரகாசம், தலைமையிடத்து துணை வட்டாட்சியா் உதயகுமாா் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.
போஜனாபுரம், உள்ளி, சீவூரான்பட்டி உள்ளிட்ட இடங்களில் அடிக்கடி ஏற்படும் மின்தடையை சீரமைக்க வேண்டும். செட்டிகுப்பம் பகுதியில் மயான வசதியை ஏற்படுத்தித் தர வேண்டும். உள்ளி, ஆத்தோரம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் இரவு நேரங்களில் பாலாற்றில் நடைபெறும் மணல் கொள்ளையை தடுக்க வேண்டும்.
மோா்தானா அணையின் வலதுபுற கால்வாயை துாரெடுத்து, சீரமைக்க வேண்டும். உப்பரப்பல்லி கிராமத்தின் குடிநீா்த் தேவையை பூா்த்தி செய்ய உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். பாலாற்றின் குறுக்கே அமைந்துள்ள பழுதடைந்த உள்ளி- மாதனூா் பாலத்தை சீரமைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை விவசாயிகள் வலியுறுத்தினா்.
கூட்டத்தில் முன்னோடி விவசாயிகள் ஜி.சம்பத் நாயுடு, சேகா், பழனி, ஏ.சி.பாபு, துரைசெல்வம் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.