செய்திகள் :

காயத்திலிருந்து மீண்டு ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் இணைந்த சஞ்சு சாம்சன்!

post image

இந்த ஆண்டு ஐபிஎல் தொடருக்காக ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் அந்த அணியின் பயிற்சி முகாமில் இணைந்தார்.

ஐபிஎல் தொடர் தொடங்குவதற்கு இன்னும் சில நாள்களே உள்ள நிலையில், அனைத்து அணிகளும் ஐபிஎல் தொடருக்கான பயிற்சியை தீவிரப்படுத்தியுள்ளன. கிட்டத்தட்ட வெளிநாட்டு வீரர்கள் அனைவரும் அவர்களது அணியுடன் இணைந்து பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதையும் படிக்க:ஹாரி ப்ரூக்குக்கு பிசிசிஐ விதித்த தடை கடுமையானதா? மொயின் அலி பதில்!

ராஜஸ்தான் ராயல்ஸுடன் இணைந்த சஞ்சு சாம்சன்

இந்திய அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான சஞ்சு சாம்சனுக்கு இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடரின்போது, கை விரலில் காயம் ஏற்பட்டது. அதன் பின், அவருக்கு கை விரலில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.

இந்த நிலையில், காயத்திலிருந்து குணமடைந்த சஞ்சு சாம்சன் ஐபிஎல் தொடருக்கான பயிற்சிக்காக ராஜஸ்தான் ராயல்ஸ் அணியுடன் இணைந்துள்ளார்.

இது தொடர்பாக ராஜஸ்தான் ராயல்ஸின் எக்ஸ் வலைத்தளப் பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது: விமான நிலையத்திலிருந்து நேராக அணியின் முதல் பயிற்சி ஆட்டத்துக்காக சஞ்சு சாம்சன் மைதானத்துக்கு வந்து, அவர் எப்போதும் புன்னகையுடன் இருப்பதைப் போன்று அனைவரின் முகத்திலும் புன்னகையை வரவைத்துள்ளார் எனப் பதிவிடப்பட்டுள்ளது.

இதையும் படிக்க: கடந்த சீசனில் கேப்டன், இந்த முறை துணைக் கேப்டன்; தில்லி கேபிடல்ஸ் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் மார்ச் 23 ஆம் தேதி ராஜஸ்தான் ராயல்ஸ் அணி அதன் முதல் போட்டியில் சன் ரைசர்ஸ் ஹைதராபாதை எதிர்த்து விளையாடவுள்ளது குறிப்பிடத்தக்கது.

சர்வதேச மாஸ்டர்ஸ் லீக்கில் சாம்பியன் பட்டம் வென்றது குறித்து மனம் திறந்த சச்சின் டெண்டுல்கர்!

சர்வதேச மாஸ்டர்ஸ் லீக் தொடரில் சாம்பியன் பட்டம் வெல்வது சிறப்பான சாதனை என சச்சின் டெண்டுல்கர் தெரிவித்துள்ளார்.சர்வதேச மாஸ்டர்ஸ் லீக் கிரிக்கெட் தொடர் அண்மையில் நிறைவடைந்தது. இந்தத் தொடரில் சிறப்பாக வ... மேலும் பார்க்க

ஹசன் நவாஸ் அதிவேக சதம்: 205 ரன்கள் இலக்கை விரட்டிப் பிடித்து பாகிஸ்தான் அசத்தல்!

நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் ஹசன் நவாஸ் சதத்தால் 205 ரன்கள் இலக்கை விரட்டிப் பிடித்தது பாகிஸ்தான்.நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாட... மேலும் பார்க்க

அஸ்வின் வசிக்கும் சாலைக்கு அவரது பெயரை சூட்ட சென்னை மாநகராட்சி முடிவு!

சென்னையில் உள்ள ஒரு சாலைக்கு இந்திய வீரர் அஸ்வின் பெயரை சூட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது.கிரிக்கெட்டின் மிகச் சிறந்த சிந்தனையாளர் என்று அழைக்கப்படும் இந்திய சுழற்பந்து ஜாம்பவான் ரவிச்சந்திரன் அஸ்வின் கட... மேலும் பார்க்க

பாதுகாப்பு காரணங்களால் கேகேஆர் - லக்னௌ போட்டி வேறு இடத்துக்கு மாற்றம்!

பாதுகாப்பு காரணங்களால் கேகேஆர் - லக்னௌ போட்டி குவாஹாட்டிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.18-வது ஐபிஎல் தொடரில் முதலாவது போட்டி வருகிற 22 ஆம் தேதி கொல்கத்தாவின் ஈடன் காடன் மைதானத்தில் நடக்கவிருக்கிறது. ம... மேலும் பார்க்க

ஐபிஎல்லில் இம்பாக்ட் பிளேயர் விதி தொடரும்! -பிசிசிஐ

நிகழாண்டுக்கான ஐபிஎல்லில் இம்பாக்ட் பிளேயர் விதி தொடருமா? என அனைவர் மத்தியிலும் கேள்வியெழுந்துள்ளது. 18-வது ஐபிஎல் தொடர் வருகிற 22 ஆம் தேதி கொல்கத்தாவில் தொடங்கவிருக்கிறது. இந்தத் தொடரின் தொடக்கப் போட... மேலும் பார்க்க

மிரட்டிய டிராவிஸ் ஹெட்: விராட் கோலி அளித்த பரிசால் சதமடித்த நிதீஷ் ரெட்டி!

இந்தியாவின் ஆல்-ரவுண்டர் நிதீஷ் ரெட்டி பூமா பாட்காஸ்ட் நிகழ்ச்சியில் அளித்த பேட்டியில் விராட் கோலி தனக்கு அளித்த பரிசு குறித்து நெகிழ்ச்சியாகப் பேசியுள்ளார். கடந்த ஐபிஎல் தொடரில் சிறப்பாக விளையாடியதால... மேலும் பார்க்க