காயம் குணமாகியது: சன்ரைசர்ஸ் அணியில் இணையும் நிதீஷ் ரெட்டி!
பிரபல ஆல்ரவுண்டர் நிதீஷ் ரெட்டி சன்ரைசர்ஸ் அணியில் இணைய தயாராக இருக்கிறார்.
கடந்த ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் பேட்டிங், பந்துவீச்சு என அசத்தியவர் நிதீஷ் குமார் ரெட்டி.
இவரது சிறப்பான செயல்பாட்டினால் பார்டர்-கவாஸ்கர் தொடரிலும் அறிமுகமாகினார்.
பிஜிடி தொடரில் சதமடித்து அசத்தினார். தொடர் முழுவதும் சிறப்பான பேட்டிங்கின் மூலம் கவனம் ஈர்த்தார்.
ஜனவரி முதல் காயம் காரணமாக என்சிஏவில் இருந்தார் நிதீஷ் ரெட்டி தற்போது முழுமையான உடல் தகுதி பெற்றதாக பிடிஐ செய்தி நிறுவனம் அறிவித்துள்ளது.
பயிற்சியாளர்கள், பிசியோதெரபிஸ்டுகளும் நிதீஷ் ரெட்டி விளையாடலாம் எனக் கூறியுள்ளார்கள்.
மேலும் உடல்தகுதியை நிரூபிக்கும் யோ-யோ சோதனையிலும் தேர்ச்சிப் பெற்றுள்ளார்.
விரைவில் அணியுடன் இணையவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
21 வயதாகும் நிதீஷ் ரெட்டி இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் காயம் காரணமாக வெளியேறினார்.
கடந்த ஐபிஎல் தொடரில் 13 போட்டிகளில் 303 ரன்கள் எடுத்தார். ஸ்டிரைக் ரேட் 143ஆக இருந்ததும் குறிப்பிடத்தக்கது.
சன்ரைசர்ஸ் அணி மார்ச்.23ஆம் தேதி ஹைதராபாத்தில் ராஜஸ்தானை எதிர்கொள்ளவிருக்கிறது.
இந்த அணிக்கு கேப்டனாக ஆஸி. கேப்டன் பாட் கம்மின்ஸ் இருக்கிறார். கடந்தமுறை இறுதிப் போட்டியில் தோல்வியுற்றனர்.
நடப்பு ஐபிஎல் தொடரில் வெளிநாட்டு கேப்டனாக இருப்பவர் இவர் மட்டுமே.