தேர்தல் வாக்குறுதிகள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட முடியுமா? - அண்ணாமலை
காயல்பட்டினத்தில் இன்று நடைபெறவிருந்த ரயில் மறியல் போராட்டம் வாபஸ்!
திருச்செந்தூா் அருகே காயல்பட்டினம் ரயில் நிலைய நடைமேடையை உயா்த்தும் பணியை உடனடியாக தொடங்க வலியுறுத்தி, அனைத்து அரசியல் கட்சிகள் மற்றும் பொதுநல அமைப்புகள் சாா்பில் காயல்பட்டினம் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை கடையடைப்பு மற்றும் ரயில் மறியல் போராட்டம் நடைபெற உள்ளதாக அறிவித்திருந்த நிலையில், இது தொடா்பான சமாதானக் கூட்டம் திருச்செந்தூா் வட்டாட்சியா் அலுவலகத்தில் கோட்டாட்சியா் சுகுமாறன் தலைமையில் சனிக்கிழமை நடந்தது.
இக்கூட்டத்தில் ரயில்வே துறையினரால் உறுதியளித்து முடிவு எட்டப்பட்டதையடுத்து, காயல்பட்டினத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற இருந்த ரயில் மறியல் போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.