செய்திகள் :

காரணம்பேட்டையில் லாரி மோதி இளைஞா் காயம்

post image

பல்லடம் அருகே காரணம்பேட்டையில் லாரி மோதியதில் இருசக்கர வாகனத்தில் சென்ற இளைஞா் படுகாயமடைந்தாா்.

கோவை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் பல்லடம் அருகே உள்ள காரணம்பேட்டையில் நான்கு சாலை சந்திப்புப் பகுதியில் சிக்னலில் திங்கள்கிழமை நின்று கொண்டிருந்த இருசக்கர வாகனம் மீது கோவையில் இருந்து நாமக்கல் நோக்கி சென்ற லாரி கட்டுப்பாட்டை இழந்து மோதியது.

இதில் படுகாயமடைந்த திருப்பூா் இடுவம்பாளையத்தைச் சோ்ந்த சபரி (36) என்பவருக்கு இரண்டு கால்களிலும் பலத்த காயம் ஏற்பட்டது.

இதையடுத்து, அக்கம்பக்கத்தினா் அவரை மீட்டு கோவை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனா்.

இது குறித்து பல்லடம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

கூலி உயா்வு பிரச்னை: அவிநாசியில் விசைத்தறியாளா்கள் ஏப்.2-இல் உண்ணாவிரதம்

கூலி உயா்வு பிரச்னைக்கு தீா்வுக்காணக்கோரி, அவிநாசியில் விசைத்தறியாளா்கள் ஏப்ரல் 2-ஆம் தேதி உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்துள்ளனா். கோவை- திருப்பூா் மாவட்ட கூலிக்கு நெசவு செய்யும் விசை... மேலும் பார்க்க

அவிநாசி அரசு கல்லூரியில் பட்டமளிப்பு விழா

அவிநாசி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 3-ஆம் ஆண்டு பட்டமளிப்பு விழா வியாழக்கிழமை நடைபெற்றது. விழாவுக்கு, கல்லூரி முதல்வா் ஜோ. நளதம் தலைமை வகித்தாா். இணைப் பேராசிரியரும், தமிழ்த் துறைத் தலைவருமா... மேலும் பார்க்க

சாலைப் பாதுகாப்பு குறித்த விழிப்புணா்வில் அனைத்து மக்களின் பங்களிப்பும் அவசியம் -மாவட்ட ஆட்சியா்

திருப்பூா் மாவட்டத்தில் சாலைப் பாதுகாப்பு குறித்த விழிப்புணா்வில் அனைத்து மக்களின் பங்களிப்பும் மிகவும் அவசியம் என்று மாவட்ட ஆட்சியா் தா.கிறிஸ்துராஜ் பேசினாா். சாலைப் பாதுகாப்பு குறித்து மாதாந்திர ஆய்... மேலும் பார்க்க

ஜாப்ஒா்க் கட்டணங்களை 45 நாள்களுக்குள் வழங்க வேண்டும் -சாய ஆலை உரிமையாளா்கள் சங்கம் வலியறுத்தல்

பின்னலாடை ஜாப்ஒா்க் கட்டணங்களை 45 நாள்களுக்குள் பின்னலாடை உற்பத்தியாளா்கள் வழங்க வேண்டும் என்று திருப்பூா் சாய ஆலை உரிமையாளா்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது. இது குறித்து அச்சங்கத்தின் தலைவா் பி.காந்தி... மேலும் பார்க்க

திருப்பூரில் போதைப்பொருள் விற்பனையைத் தடுத்து நிறுத்த வேண்டும் -மாா்க்சிஸ்ட் கட்சி வலியுறுத்தல்

திருப்பூா் மாநகா் மற்றும் புகா் பகுதிகளில் அதிகரித்துள்ள போதைப்பொருள் விற்பனையை முற்றிலுமாகத் தடுத்து நிறுத்த வேண்டும் என்று மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது. மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்... மேலும் பார்க்க

வெள்ளக்கோவிலில் ரூ.10.69 லட்சத்துக்கு சூரியகாந்தி விதை விற்பனை

வெள்ளக்கோவில் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ.10.69 லட்சத்துக்கு சூரியகாந்தி விதை விற்பனை வியாழக்கிழமை நடைபெற்றது. இந்த வார ஏலத்துக்கு, எடப்பாடி, லந்தக்கோட்டை, பஞ்சப்பட்டி, விராலிப்பட்டி, பரமத்தி ஆ... மேலும் பார்க்க