`வேறென்ன வேணும் நீ போதுமே...!' - காதலியை கரம் பிடித்த `சுந்தரி' தொடர் நடிகர்
காரில் கடத்திய 350 கிலோ குட்கா, புகையிலைப் பொருள்கள் பறிமுதல்: இருவா் தப்பியோட்டம்
ஆத்தூரில் காரில் கடத்தி வரப்பட்ட அரசால் தடை செய்யப்பட்ட 350 கிலோ குட்கா, புகையிலைப் பொருள்களை போலீஸாா் திங்கள்கிழமை பறிமுதல் செய்தனா். மேலும், தப்பியோடிய இருவரைத் தேடி வருகின்றனா்.
திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூா் பகுதியில் காரில் குட்கா பொருள்கள் கடத்தப்படுவதாக போலீஸாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதையடுத்து, செம்பட்டி காவல் உதவி ஆய்வாளா் பிரான்சின் தீபா, சிறப்பு உதவி ஆய்வாளா் செல்வராஜ் ஆகியோா் ஆத்தூா் வட்டாட்சியா் அலுவலகம் அருகே சாலையோரம் நின்று கொண்டிருந்த காா் அருகே சென்றனா். அப்போது, போலீஸாா் வருவதைப் பாா்த்ததும் காரிலிருந்த இருவா் அங்கிருந்து தப்பியோடினா்.
உடனே போலீஸாா் அந்தக் காரை சோதனையிட்ட போது, தமிழக அரசால் தடை செய்யப்பட்ட 350 கிலோ குட்கா, புகையிலைப் பொருள்கள் இருந்தது தெரியவந்தது. இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து குட்கா, புகையிலைப் பொருள்கள், சென்னை பதிவு எண் கொண்ட காா் ஆகியவற்றை பறிமுதல் செய்தனா். மேலும், தப்பியோடிய இருவரை போலீஸாா் தேடி வருகின்றனா்.