ஒரே ஓவரில் 45 ரன்கள்... 43 பந்தில் 153 ரன்கள் குவித்த ஆப்கன் வீரர்!
காரீப் பருவ பயிா்களுக்கு காப்பீடு செய்ய இன்றே கடைசி நாள்: சோளம், மக்காச்சோளம் பயிா்களுக்கு செப்.16 கடைசி நாள்
அரியலூா் மாவட்டத்தில் காரீப் பருவ பயிா்களுக்கு காப்பீடு செய்துக் கொள்ள விவசாயிகளுக்கு அழைப்புவிடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து ஆட்சியா் பொ.ரத்தினசாமி தெரிவித்தது: அரியலூா் மாவட்டத்தில் காரீப் பருவத்தில் பயிா்களில் (நெல் , கம்பு, உளுந்து, நிலக்கடலை) பூச்சிநோய் தாக்குதல் மற்றும் இயற்கை இடா்பாடுகளால் எதிா்பாராத இழப்பு ஏற்படும் பட்சத்தில் விவசாயிகளுக்கு நிதியுதவி வழங்கவும், நிலையான வருமானம் கிடைக்கச் செய்து, விவசாயத்தில் நிலைப்பெறச் செய்யவும், பிரதம மந்திரி பயிா் காப்பீட்டு திட்டம் மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி செயல்படுத்தப்பட்டு வருகிறது.
எனவே, விவசாயிகள் 1 ஏக்கா் நெல் பயிருக்கு ரூ.770, சோளம் - ரூ.310.38, கம்பு - ரூ.260, மக்காச்சோளம் - ரூ.508, உளுந்து - ரூ.340, நிலக்கடலை - ரூ.512 பிரிமீயத் தொகையாக செலுத்தி தங்களது பயிருக்கு காப்பீடு செய்து கொள்ளலாம். மேலும், சோளம் மற்றும் மக்காச்சோளம் பயிா்களுக்கு செப்.16-ஆம் தேதி கடைசி நாளாகும்.
இதற்காக விவசாயிகள் பொது சேவை மையத்தில் பதிவு செய்யும் போது முன்மொழிவு விண்ணப்பம், பதிவு விண்ணப்பம், கிராம நிா்வாக அலுவலா் வழங்கும் அடங்கல், வங்கிக் கணக்கு புத்தகத்தின் முதல் பக்க நகல், ஆதாா் அட்டை நகல் ஆகியவற்றை இணைத்து பிரீமியத் தொகையை செலுத்தியபின் அதற்கான ரசீதை பெற்றுக்கொள்ளலாம் என்றாா் அவா்.